கல்வி கட்டண கமிட்டிக்கு புதிய தலைவர் நியமனம் - அரசாணை வெளியீடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, July 03, 2020

Comments:0

கல்வி கட்டண கமிட்டிக்கு புதிய தலைவர் நியமனம் - அரசாணை வெளியீடு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
School Education - The Tamilnadu Schools(Regulation of Collection of Fee) Act 2009 - Private Schools Fee Determination Committee - Nomination of Chairperson - Order Issued - Dt: 01.07.20
தனியார் பள்ளிகளுக்கான, கல்வி கட்டண நிர்ணய குழுவின் தலைவராக, சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி பாலசுப்ரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில், மெட்ரிக், சி.பி.எஸ்.இ., உள்ளிட்ட அனைத்து வகை தனியார் பள்ளிகளுக்கும், கல்வி கட்டணத்தை நிர்ணயிக்க, கட்டண கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.இந்த கமிட்டியின் தலைவராக இருந்த, சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி மாசிலாமணியின் பதவிக்காலம், இந்தாண்டு மார்ச்சில் முடிந்த நிலையில், அந்த இடத்தில், புதிய தலைவரை நியமிக்க, அரசு நடவடிக்கை எடுத்தது. இதன்படி, சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி பாலசுப்ரமணியன், தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணய குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் மூன்றாண்டு காலத்துக்கு, தலைவராக பணியாற்றுவார் என, கூறப்பட்டுள்ளது.இந்த கமிட்டியில், பள்ளிக் கல்வி, மெட்ரிக், தொடக்கக் கல்வி ஆகியவற்றின் இயக்குனர்கள், பொதுப்பணி துறையின் இணை தலைமை இன்ஜினியர், பள்ளி கல்வித் துறையின் இணை செயலர் உள்ளிட்டோர் உறுப்பினர்களாக இருப்பர். இதற்கான அரசாணையை, பள்ளிக் கல்வி செயலர் தீரஜ்குமார் நேற்று பிறப்பித்தார்.
தனியார் பள்ளிகளுக்கான கட்டணங்களை முறைப்படுத்த அமைக்கப்பட்ட கட்டண குழுவுக்கு புதிய தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி பாலசுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார். தனியார் பள்ளிகளின் கட்டணங்களை முறைப்படுத்துவதற்காக 2009ல் ஒரு குழுவை அமைத்து அரசு ஆணை பிறப்பித்தது. அதன் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரும் அதன் அலுவல் சார்ந்த உறுப்பினர்களாக பள்ளிக்கல்வி இயக்குநர், மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குநர், ெதாடக்க கல்வி இயக்குநர், பொதுப்பணித்துறையை சார்ந்த அதிகாரி ஒருவர் இருப்பார்கள். மேலும், பள்ளிக் கல்வித்துறையின் கூடுதல் செயலாளர் உறுப்பினர் செயலாளராகவும் இருப்பார் என்று ஆணையில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் கடந்த 2009ம் ஆண்டு முதல் கட்டணக் குழுவின் தலைவர்கள் ஒவ்வொரு 3 ஆண்டுக்கும் ஒருவர் பணியாற்றி வந்தனர். அதில் இறுதியாக ஓய்வு பெற்ற நீதிபதி மாசிலாமணி, கடந்த மார்ச் 20ம் தேதிவரை பணியில் இருந்தார். அவரது பதவிக்காலம் முடிந்ததை அடுத்து கட்டண குழுவுக்கு தலைவர் நியமிக்கபடாமல் காலியாக இருந்தது. அடுத்த கல்வி ஆண்டு தொடங்க உள்ள நிலையில் அந்த குழுவுக்கு புதிய தலைவர் நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் மற்றும் சிறப்பு அதிகாரியின் உத்தரவின் பேரில் தற்போது ஓய்வு பெற்ற நீதிபதி ஆர்.பால சுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், தனியார் பள்ளிகளுக்கான கட்டண குழுவின் தலைவராக அடுத்த 3 ஆண்டுகளுக்கு பொறுப்பு வகிப்பார். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews