UGC அங்கீகாரம் கிடைக்காததால் 2018 - 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற பிஎட் மாணவர்கள் சேர்க்கையை ரத்து செய்து தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் உத்தரவு. கல்விக்கட்டணம் திருப்பி வழங்கப்படும் எனவும் அறீவிப்பு
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில், 2019 ஜனவரியில் சேர்ந்த, பி.எட்., மாணவர்களின் சேர்க்கை, திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை சார்பில், பதிவாளர் ரத்னகுமார், மாணவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதம்:தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை, 2004 முதல், ஆசிரியர் பயிற்சி படிப்பான, பி.எட்., பட்டப்படிப்பை நடத்துகிறது.தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சிலின் அங்கீகாரம் பெற்று, இதுவரை, 12 ஆயிரத்து, 500 பேர், பி.எட்., படிப்பை முடித்துள்ளனர்.
இதன்படி, 2018 - 19ம் ஆண்டிற்காக, 2019 ஜனவரியில், பி.எட்., மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது.பி.எட்., படிப்பை நடத்த, 2017 - 18 வரை, பல்கலை மானிய குழுவான யு.ஜி.சி.,யின் அனுமதியை பெற வேண்டியதில்லை. ஆனால், 2018 - 19ம் கல்வி ஆண்டு முதல், யு.ஜி.சி., அனுமதி பெற வேண்டும் என, அறிவிக்கப்பட்டது.இந்த அனுமதிக்காக, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை விண்ணப்பித்திருந்தது. அனுமதிக்காக பல முறை, யு.ஜி.சி.,யிடம் முறையீடு செய்து, மாணவர்களின் நலன் குறித்து, பல்கலை மன்றாடியது. ஆனால், 2018 - 19ம் கல்வி ஆண்டில், முன் அனுமதியின்றி மாணவர்களை சேர்த்ததாக கூறி, அந்த மாணவர் சேர்க்கையை ரத்து செய்யுமாறு, யு.ஜி.சி., திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. எனவே, மாணவர் சேர்க்கையை ரத்து செய்ய வேண்டியதை, வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம்.
இந்த படிப்பில் சேர்ந்த மாணவர்கள் அனைவருக்கும், விண்ணப்ப கட்டணம் உள்பட அனைத்து கட்டணத்தையும், பல்கலையின் சார்பில் தாமதமின்றி திருப்பி தர நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம்.எனவே, மாணவர்கள் பல்கலை வழங்கியுள்ள உறுதி கடிதத்தை, soetnou123@gmail.com என்ற, இ - மெயில் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இது போன்ற நிகழ்வுகள், வருங்காலத்தில் நிகழாமல் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுவோம்.இவ்வாறு, கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.