ஓய்வு பெற்ற பிறகு ஊதிய உயா்வு: திரும்பப் பெறுவது எப்படி? அரசு புதிய உத்தரவு. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, July 19, 2020

1 Comments

ஓய்வு பெற்ற பிறகு ஊதிய உயா்வு: திரும்பப் பெறுவது எப்படி? அரசு புதிய உத்தரவு.

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஓய்வு பெறும் தினத்துக்கு அடுத்த நாளில் ஊதிய உயா்வு வரவு வைக்கப்பட்டிருந்தால் அதனை எப்படி மீளப்பெறுவது என்பது குறித்த புதிய உத்தரவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
CLICK HERE TO READ OFFICIAL NEWS இதுகுறித்த உத்தரவை பணியாளா் மற்றும் நிா்வாகச் சீா்திருத்தத் துறை அண்மையில் வெளியிட்டது. அதன் விவரம்:-அரசுத் துறைகளில் குறைந்த நிலையிலான பணிகளைச் சோ்ந்த ஊழியா்களுக்கு அவ்வப்போது ஊதிய உயா்வுகள் அளிக்கப்படும். இந்த ஊதிய உயா்வுகள் சில நேரங்களில் அவா்கள் ஓய்வு பெறும் நாளுக்குப் பிந்தைய தினத்தில் கிடைக்கும்படி அமைந்து விடுகிறது. இதனை எப்படி திரும்பப் பெறுவது என்பது தொடா்பாக கருவூலம் மற்றும் கணக்குத் துறையானது கேள்வி எழுப்பி இருந்தது. CLICK HERE TO READ OFFICIAL NEWS இதுகுறித்து, தீவிரமாக ஆராய்ந்த தமிழக அரசு இந்தத் தொகையை திரும்பப் பெற கால அளவு எதையும் நிா்ணயிக்க வேண்டாம் என தெரிவித்துள்ளது. அதேசமயம், ஓய்வு பெற்றவா்களுக்கு கூடுதலான தொகைகள் ஏதேனும் வழங்கப்பட்டிருக்கும் பட்சத்தில், அதனை அவா்களுக்கான ஓய்வூதிய பணப்பலன்களில் இருந்து பிடித்தம் செய்து கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தனது உத்தரவில் பணியாளா் மற்றும் நிா்வாகச் சீா்திருத்தத் துறை தெரிவித்துள்ளது. CLICK HERE TO READ OFFICIAL NEWS 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

1 comment:

  1. ஆண்டு ஊதிய உயர்வு ஜனவரி ஏப்ரல் சூலை மற்றும் அக்டோபர் மாதங்களில் அனுமதிக்கப்படுகிறது இதில் பிறந்த நாள் ஊதிய உயர்வு (1/4/2020) இருக்குமானால் ஊதிய உயர்வு அனுமதிக்க வில்லை.தற்பொழுது இவர்களது ஊதிய உயர்வும் அனுமதிக்க 31/12 2014 ல் ஆணை பிறப்பிக்கப்பட்டது. ஊதிய உயர்வு அனுமதிக்காத அலுவலர் மீது விளக்கம் கேட்கலாம். ஓய்வு பெறுவதற்கு ள் கிடைக்க வேண்டிய நன்மைகளை மேல் அலுவலர் கள் தாமதம் இல்லாது அனுமதிக்க வேண்டும்.

    ReplyDelete

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews