Search This Blog
Wednesday, May 20, 2020
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு பணியில் தொடக்க, நடுநிலை பள்ளி ஆசிரியர்களை ஈடுபடுத்த முடிவு..
தமிழகம் முழுவதும் ஜூன் மாதம் 15ஆம் தேதி முதல் நடைபெற உள்ள பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு பணிக்கு முதன் முறையாக தொடக்க நடுநிலை பள்ளி ஆசிரியர்களை பயன்படுத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு எடுத்து அவர்களது முழு விவரத்தை கேட்டுள்ளது .தமிழகம் முழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற வேண்டிய பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கரோணா நோய் தொற்றால் இதுவரை நடைபெறவில்லை ஜூன் 1ம் தேதி முதல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட தேர்வு ஜூன் 15ம் தேதி முதல் நடைபெற உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை செவ்வாய்க்கிழமை அறிவித்தது இந்த நிலையில் கரோணா நோய் தொற்றால் பொது தேர்வு அறையில் 20 மாணவர்களுக்கு பதிலாக சமூக இடைவெளியை கருத்தில் கொண்டு ஒவ்வொரு தேர்வுக்கும் 10 மாணவர்கள் தேர்வு எழுதும் படி ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன ஏற்கனவே ஒரு அறையில் 20 மாணவர்கள் எழுதும்போது உயர்நிலை மேல்நிலைப் பள்ளியின் அனைத்து வகை ஆசிரியர்களே போதுமானதாக இருந்தது.
இந்த நிலையில் அறையில் பத்து மாணவர்கலே எழுத உள்ளதால் அறை கண்காணிப்பாளர்கள் பணிக்கு ஆசிரியர்கள் பற்றாக்குறை ஏற்படும் என்பதால் அதை போக்க தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து வகை ஆசிரியர்கள் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் விவரங்களை கேட்டுள்ளது அதில் ஆசிரியர் பணி புரியும் ஒன்றியம் கல்வி மாவட்டம் பணிபுரியும் பள்ளி பாலினம் பதவி பிறந்த தேதி மாற்றுத்திறனாளியை கட்செவி அஞ்சல் எண் இருப்பிட முகவரி உள்ளிட்ட விவரங்களை கேட்டுள்ளது அதைத்தொடர்ந்து தொடக்க நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்களது பள்ளி ஆசிரியர் விவரங்களை அந்தந்த வட்டார கல்வி அலுவலர்கள் கல்வி மாவட்ட அலுவலர்கள் மூலம் அனுப்பி வருகின்றனர்
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
Home
1-10th
EXAMS
SGT
TEACHERS
10ம் வகுப்பு பொதுத்தேர்வு பணியில் தொடக்க, நடுநிலை பள்ளி ஆசிரியர்களை ஈடுபடுத்த முடிவு
10ம் வகுப்பு பொதுத்தேர்வு பணியில் தொடக்க, நடுநிலை பள்ளி ஆசிரியர்களை ஈடுபடுத்த முடிவு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.