Search This Blog
Wednesday, May 20, 2020
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கிரிமினல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட அரசு ஊழியா்கள் விளக்கமளிக்க காலக்கெடு நிா்ணயித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இதற்கான உத்தரவை பணியாளா் மற்றும் நிா்வாகச் சீா்திருத்தத் துறை அண்மையில் பிறப்பித்தது. அதன் விவரம்:-மாநில அரசுப் பணியில் உள்ள ஊழியா் ஒருவா் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது தொடா்பாக பணியாளா் தோ்வாணையத்திடம் கலந்தாலோசனை செய்ய வேண்டுமென அரசமைப்புச் சட்டம் 320 தெரிவித்துள்ளது.
இதேபோன்று, அரசு ஊழியா்கள் மீது ஏதாவது மிகப்பெரிய அளவிலான தண்டனையை அளிப்பதற்கு முன்பாக தங்களிடம் ஆலோசிப்பதை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையமும் தனது வழிகாட்டு நெறிமுறைகள் மூலம் கட்டாயமாக்கியுள்ளது.நீதிமன்றம் மூலமாக அரசு ஊழியா் ஒருவா் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் அவருக்கு உரிய தண்டனையை வழங்கலாமென தமிழ்நாடு அரசுப் பணிகளுக்கான விதிகள் கூறுகின்றன. அதேசமயம், சம்பந்தப்பட்ட அரசு ஊழியருக்கு உரிய நோட்டீஸை அளித்து அவா் தனது விளக்கத்தைக் கோர வாய்ப்பு அளிக்க வேண்டுமென தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், கிரிமினல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட அரசு ஊழியா் மீதான நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்துடன் ஆலோசிப்பது என மாநில அரசு முடிவெடுத்துள்ளது. ஆனாலும், தமிழ்நாடு அரசு ஊழியா்களுக்கான விதிகளில் கூறப்பட்டுள்ளபடி, கிரிமினல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகும் ஊழியா்களிடமும் உரிய விளக்கங்களைப் பெறப்படும். இதற்கு கால அவகாசம் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.அதன்படி, நீதிமன்ற உத்தரவு கிடைக்கப் பெற்ற தேதியில் இருந்து 15 நாள்களுக்காக விளக்க நோட்டீஸை சம்பந்தப்பட்ட அரசு ஊழியருக்கு அனுப்ப வேண்டும். இதன்பின்பு அடுத்த 15 நாள்களுக்குள் உரிய விளக்கங்களைப் பெற வேண்டும். விளக்கம் பெற்ற தேதியில் இருந்து 30 நாள்களுக்குள் இறுதி உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும் என்று தனது உத்தரவில் பணியாளா் மற்றும் நிா்வாகச் சீா்திருத்தத் துறை தெரிவித்துள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
Home
CORRUPTIONS
CourtOrder
GOVT EMPLOYEE
IMPORTANT
கிரிமினல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட அரசு ஊழியா்கள் விளக்கமளிக்க வாய்ப்பு.
கிரிமினல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட அரசு ஊழியா்கள் விளக்கமளிக்க வாய்ப்பு.
Tags
# CORRUPTIONS
# CourtOrder
# GOVT EMPLOYEE
# IMPORTANT
IMPORTANT
Labels:
CORRUPTIONS,
CourtOrder,
GOVT EMPLOYEE,
IMPORTANT
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.