Search This Blog
Sunday, April 26, 2020
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,000-த்தை தாண்டியது. கொரோனாவுக்கு எதிராக உலகநாடுகள் போராடி வருகின்றன. இதற்கான மருந்துகளைக் கண்டுபிடிக்கும் பணிகளும் தொடர்ந்து நடந்து வருகின்றன. உலக நாடுகள் பல்வேறு வழிமுறைகளைக் கையாண்டு கொரோனா நோயாளிகளைக் குணப்படுத்தி வருகின்றனர். இதில் பிளாஸ்மா தெரபி சிகிச்சை முறை ஓரளவு கைகொடுக்கிறது. இந்தியாவில் ஆபத்தான நிலையில் இருக்கும் நோயாளிகளுக்கு இநக்ச் சிகிச்சை அளிக்க மத்திய அரசு சமீபத்தில் ஒப்புதல் வழங்கியுள்ளது.
அது என்ன பிளாஸ்மா தெரபி என்கிறீர்களா?
பிளாஸ்மா என்பது குருதி அணுக்களை ஏந்திச் செல்லும் திரவம். கொரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்த நோயாளியின் உடலில் இருந்து பிளாஸ்மா எடுக்கப்பட்டு கொரோனா நோயாளிகளுக்குச் செலுத்தப்படுகிறது. ரத்தத்தில் இருந்து பிளாஸ்மாவை பிரித்தெடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு உடலில் செலுத்தும் முறைதான் பிளாஸ்மா சிகிச்சைமுறை. ரத்தம்தானம் போன்றதுதான் இதுவும்.
கொரோனா நோய்த் தொற்றில் இருந்து மீண்டவர்களின் உடலில் உள்ள எதிர்ப்பு புரதத்தைப் பயன்படுத்தி சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதன்காரணமாக கொரோனா நோய்த் தொற்றில் பாதிக்கப்பட்டவர்களில் உடலில் எதிர்ப்புசக்தி அதிகரித்து கொரோனாவுக்கு எதிராகப் போராட அவர்களது உடல் தயாராகிறது.
பிளாஸ்மா
இந்தியாவின் முதல் கோவிட்-19 பிளாஸ்மா நன்கொடையாளர் ஸ்மிரிதி தாக்கர் தன் அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார். அகமதாபாத்தைச் சேர்ந்த ஸ்மிரிதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதும் தனிமைப்படுத்தப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். அதன் பின்னர், தனது வீட்டில் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டார். இதையடுத்து மருத்துவர்கள் அவரை தொடர்புகொண்டு பிளாஸ்மா தெரபி குறித்து கூறியுள்ளனர். தற்போது அவர் குடும்பத்தினரின் ஆலோசனையுடன் பிளாஸ்மா தானம் வழங்கியுள்ளார்.
"என் உடல் கொரோனாவை எதிர்த்து போராடும் ஆன்டிபாடியை உற்பத்தி செய்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் எதுவும் இல்லை என மருத்துவர்கள் கூறினர். நான் மருத்துவமனைக்குச் சென்று என்னுடைய பிளாஸ்மாவை தானம் செய்தேன். மருத்துவர்கள் மிகவும் நம்பிக்கையுடன் இருந்தனர். பிளாஸ்மா தானம் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்தும் எனக்கு மருத்துவர்கள் விளக்கமாகக் கூறினர். என்னுடைய ரத்தத்திலிருந்து பிளாஸ்மா எவ்வாறு பிரித்தெடுக்கப்படும் கொரோனா நோயாளிகளின் உடலில் அவை எவ்வாறு செலுத்தப்படும் என்பது குறித்து எனக்கு விளக்கமாகக் கூறினர். பிளாஸ்மா தானம் வழங்கிய பின்னர் மருத்துவமனையில் இரண்டு மணி நேரம் இருக்கக் கூறினர். அதன்பின்னர் நான் வீடு திரும்பிவிட்டேன்.
ஸ்மிரிதி தாக்கர்
பிளாஸ்மா தானம் செய்வது தொடர்பாக மருத்துவர்கள் என்னை அணுகியது குறித்து என் குடும்பத்தினரிடம் கூறினேன். நான் இப்போது என்ன செய்யவது எனக் கேட்டேன். நீ முதலில் சென்று பிளாஸ்மா தானம் செய்துவிட்டுவா என்பதுதான் அவர்களின் பதிலாக இருந்தது. மருத்துவர்கள் உனக்கு மறுஜென்மம் அளித்துள்ளனர். அவர்கள் உன்னை ஆபத்தில் விட மாட்டார்கள் என எனக்கு தைரியம் அளித்தனர். இதையடுத்து உடனடியாக மருத்துவமனை சென்று பிளாஸ்மா தானம் அளித்தேன். இந்த இக்கட்டான நேரத்தில் கொரோனாவுக்கு எதிராகப் போராடுவதற்கு அதன்பாதிப்பில் இருந்து மக்களை மீட்பதற்கும் பிளாஸ்மா தானத்தைவிட பெரிய நன்கொடை எதுவும் இல்லை. கொரோனவில் இருந்து குணமடைந்த நோயாளிகள் அனைவரும் அதிக எண்ணிக்கையில் பிளாஸ்மா தானம் அளிக்க வேண்டும்" என ஸ்மிரிதி தாக்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
கோவிட்-19 - பிளாஸ்மா தானமளித்த முதல் இந்திய பெண்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.