Search This Blog
Monday, April 20, 2020
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், தேசிய பசுமைப்படை சார்பில், உலக பூமி தினத்தையொட்டி, 'ஆன்லைன்' மூலமாக வினாடி வினா போட்டி நடத்தப்படுகிறது.பொள்ளாச்சி கல்வி மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் ஞானசேகரன் கூறியதாவது:தமிழக சுற்றுச்சூழல் துறை தேசிய பசுமைப்படை இயக்குனர் அறிவுறுத்தலின் படி, ஏப்., 22ம் தேதி உலக பூமி தினம் கொண்டாடப்படுகிறது. கடந்த, 1970ம் ஆண்டு துவங்கி, 49 ஆண்டுகள் முடிவடைந்து, 50 ஆண்டு விழாவாக நடக்கிறது.பருவ நிலை மாற்றத்தின் காரணமாக இந்த உலகம் சந்தித்து வரும் இன்னல்கள் குறித்தும், பூமியை பாதுகாக்கும் பொருட்டும் உறுதி மொழி எடுத்து கொண்டாடப்படுகிறது.
இந்தாண்டு கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. தமிழக அரசு உலக பூமி தினத்தை, 'ஆன்லைன்' மூலமாக கொண்டாட முடிவு செய்துள்ளது.பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு இணையதளம் வழியாக வினாடி வினா நடத்தப்படுகிறது. பங்கேற்க விரும்புவர்கள், இன்று, (20ம் தேதி) மாலை, 5:00 மணி வரை இணையதளத்தில் பதிவு செய்யலாம். பெயர், பள்ளி, கல்லுாரி உள்ளிட்ட தகவல்களை பதிவு செய்ய வேண்டும்.
https://forms.gle/B6aXsBe1WTNR1swS6 என்ற இணையதள முகவரியில் பதிவு செய்ய வேண்டும். ஆன்லைன் வினாடி வினா போட்டியில் மாணவர்கள் பங்கேற்று பயன்பெறலாம்.இவ்வாறு, தெரிவித்தார்
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
Home
Application
COMPETITION
History Of Today
உலக பூமி தின வினாடி வினா - ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
உலக பூமி தின வினாடி வினா - ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
Tags
# Application
# COMPETITION
# History Of Today
History Of Today
Labels:
Application,
COMPETITION,
History Of Today
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.