Breaking

Thursday, April 02, 2020

ஓய்வூதிய பணம் ரூ.1 லட்சத்தை கரோனா நிவாரண நிதிக்கு அளித்த தாத்தா-பாட்டி!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தங்களின் ஓய்வூதிய பணம் ரூ.1 லட்சத்தை கரோனா நிவாரண நிதிக்காக அளித்துள்ளனர் 80 வயது முதிய தம்பதி. கரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவிலும் ஆட்டத்தை தொடங்கியுள்ளது. இந்தியாவில் கரோனாவால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 2000த்தை தொட்டுள்ளது. உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
கரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் பல தொழிலாளர்கள் வருமானமின்றி பாதிப்படைந்துள்ளனர். அதனால், அவர்களுக்கு உதவும் விதமாக மத்திய மாநில அரசுகள் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றன. அதுமட்டுமல்லாமல், பிரதமர் மற்றும் முதல்வர் நிவாரண நிதிக்கு தங்களால் இயன்ற உதவி புரியலாம் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதனால், மத்தியப்பிரதேசத்தை சேர்ந்த வயது முதிர்ந்த தம்பதி, தாங்கள் சேர்த்து வைத்திருந்த பென்சன் பணத்தை கரோனா நிவாரண நிதிக்காக அனுப்பியுள்ளனர். அவர்களை மத்தியப்பிரதேச முதல்வர் பாராட்டியுள்ளார். மேலும், அனைவரும் தங்களால் இயன்ற உதவியை செய்ய வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். வறுமையிலும் கரோனா நிவாரண நிதிக்காக பணம் அனுப்பிய தம்பதிக்கு தற்போது பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
CLICK HERE TO WATCH THE VIDEO
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog