Search This Blog
Thursday, April 02, 2020
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் முன்னெச்சிரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், தற்போது கொரோனா வைரஸால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 234 ஆக அதிகரித்துள்ளது. இதனால் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது. அந்த அறிக்கையில், தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ள பகுதிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் கொரோனா குறித்த தகவல்களை ஆய்வகங்கள் மற்றும் மருத்துவமனைகள் 24 மணி நேரத்திற்குள் தமிழக அரசிற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், அனைத்து மருத்துவமனைகள், குடியிருப்புகள், பள்ளி மற்றும் கல்லூரிகள், வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள், கோவில்கள், தொழிற்சாலைகள் என அனைத்து இடங்களிலும் பணிபுரியும் பணியாளர்கள், மாணவர்கள் மற்றும் வருகை புரிபவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு தேவையான தண்ணீர் குழாய்கள் மற்றும் கைகழுவ திரவ சோப்பு கரைசல் ஆகியவற்றை வைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் அடிக்கடி மருத்துவமனைகள் முழுவதுமாக கிருமி நாசினிகள் மூலம் சுத்தம் செய்ய வேண்டும். மேலும் நோய்த்தொற்று ஏற்படாதவாறு பராமரிக்க வேண்டும்.
இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள தவறும் மருத்துவமனைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் தமிழக அரசின் கொரோனா பரவல் தடுப்பு அறிவுரைகளை பின்பற்றாமல் நடப்பவர்களுக்கு 6 மாத சிறை அல்லது அபராதம் வசூலிக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் 19 மாவட்டங்களில் 234 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில், தமிழ்நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் உள்ள பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை வெளியிட்ட அறிவிப்பில், 'கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிவிப்பில், “கொரோனா வைரஸ் நோய் தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் 1939, பிரிவு 62ன் கீழ் பொது சுகாதாரத் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டிய தொற்று நோயாக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.பிரிவு 76ன் படி தமிழ்நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் உள்ள பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொள்ளை நோய் சட்டம் 1897ன்படி வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
அரசு/ தனியார், அலுவலகங்கள்/மருத்துவமனைகள், அடுக்குமாடி குடியிருப்புகள், பள்ளிகள், கல்லூரிகள், திருமண மண்டபங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், வணிக வளாகங்கள், வழிபாட்டுத்தலங்கள், தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் முதலான இடங்களில் பணிபுரிபவர்கள் மாணவ, மாணவியர் மற்றும் வருகை புரிபவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தேவையான அளவு தண்ணீர் குழாய்கள் மற்றும் திரவ சோப்பு கரைசல் அல்லது கைகளை சோப்பு வைக்கப்படவேண்டும்.
கட்டிடத்திற்குள் நுழையும் முன்பும் வெளியில் செல்லும் முன்பும் கைகளை நன்கு கழுவிய பிறகே அனுமதிக்கவேண்டும். ஆய்வகங்கள், மருத்துவமனைகள் மற்றும் மருத்துவர்கள் நோய் பற்றிய தகவல்களை உடனடியாக 24 மணி நேரத்திற்குள் பொது சுகாதாரத் துறைக்கு எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும். அவ்வாறு தெரிவிக்க தவறும் பட்சத்தில் அங்கீகாரம்/அனுமதி ரத்து செய்யப்படுவதுடன் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் அவ்வப்பொழுது முழுவதுமாக கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்து நோய்த்தொற்று ஏற்படாத வகையில் பராமரிக்கப்பட வேண்டும். நோய்த்தொற்று நடவடிக்கைகள் எடுக்கத் தவறும் மருத்துவமனைகள் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். இந்தப் பொது அறிவிப்பானது தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் 1939 மற்றும் கொள்ளை நோய் சட்டம் 1897இன் கீழ் கொடுக்கப்படுகிறது.
மேற்குறிப்பிட்ட அறிவுரைகளை கடைப்பிடிக்காதவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் மேலும் இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 188 கீழ் 6 மாத சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்ந்த தண்டனைக்கு உள்ளாவார்கள் இந்த பொது அறிவிப்பு சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எழுத்து மூலமாக தகவல் தெரிவிக்கப்பட்டதாக கருதப்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
Home
AWARENESS
CORONA
TAMILNADU
'தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம்'.. 'தமிழக அரசு அறிக்கை வெளியீடு'..!
'தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம்'.. 'தமிழக அரசு அறிக்கை வெளியீடு'..!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.