👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மாதாந்திர பால் கார்டுகள் குறித்து ஆவின் முக்கிய அறிவிப்பிணை வெளியிட்டுள்ளது.
சீனாவில் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தற்போது உலகத்திற்கே அச்சுறுத்தலாக உருமாறியுள்ளது. இதுவரை இந்தியாவில் 3588 பேர் இந்த வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 99 பேர் பலியாகியுள்ளனர்.
மேலும் கரோனா பரவுவதைத் தடுக்கும் பொருட்டு கடந்த மாதம் 24-ஆம் தேதி நள்ளிரவு முதல் இந்த மாதம் 14-ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மாதாந்திர பால் கார்டுகள் குறித்து ஆவின் முக்கிய அறிவிப்பிணை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக ஆவின் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘ஆவின் பால் கார்டுகள் காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை இடைவேளையின்றி தொடர்ந்து விற்கப்படும்; அத்துடன் 1800-425-3300 என்ற கட்டணமில்லா எண்ணில் வாடிக்கையாளர்கள் தொடர்பு தகவல் தந்தால், பணம் பெற்றுக்கொண்டு புதிய ஆவின் கார்டு தரப்படும். மேலும் சென்னையிலுள்ள வட்டார அலுவலகங்கள், பால் நுகர்வோர் கூட்டுறவு சங்கங்களிலும் பெறலாம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.