Breaking

Monday, April 06, 2020

பொதுத்தேர்வு விடைத்தாள் பாதுகாப்பு: உறுதிப்படுத்த கல்வித்துறை அறிவுரை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பொதுத்தேர்வு விடைத்தாள்கள் பாதுகாப்பாக இருப்பதை கல்வித்துறை அலுவலர்கள் உறுதிப்படுத்த கல்வித்துறை இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு, மார்ச் 2ம் தேதி துவங்கியது. தொடர்ந்து, பிளஸ் 1 மாணவர்களுக்கு மார்ச் 4ம் தேதி துவங்கியது. பொதுத்தேர்வு நிறைவு பெறுவதற்குள், 'கொரோனா' வைரஸ் பாதிப்பு துவங்கியதால், மற்ற வகுப்புகளுக்கான தேர்வுகள் நடத்தவில்லை. பிளஸ் 2 பொதுத்தேர்வு மட்டுமே முழுமையாக நடந்தது. மேல்நிலைத்தேர்வு முடிந்து சில நாட்களிலேயே, மதிப்பீடு பணிகள் துவக்கப்பட்டிருக்கும். தற்போது, வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தேசிய அளவில் ஊரடங்கு போடப்பட்டுள்ளது. இதனால் அனைத்து பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
விடைத்தாள்கள், அந்தந்த கல்வி மாவட்டங்களில், சேகரிக்கப்பட்டு விடைத்தாள்களுக்கான 'நோடல்' மையங்களில் வைக்கப்பட்டுள்ளன. விடைத்தாள்கள், பாதுகாப்பாகவும், பூச்சிகள் அரிக்காமலும் இருப்பதை கல்வித்துறை அலுவலர்கள் பார்வையிட்டு, போதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏற்படுத்த கல்வித்துறை இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.முதன்மைக் கல்வி அலுவலர்கள், அந்தந்த கல்வி மாவட்ட அலுவலர்களுக்கு, இது குறித்து சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர். உடுமலை கல்வி மாவட்டத்தில், விடைத்தாள்கள், லுார்து மாதா பள்ளியில், வைக்கப்பட்டுள்ளன. மாவட்ட கல்வி அலுவலர் பழனிசாமி, நோடல் மையத்தை பார்வையிட்டார். விடைத்தாள்கள் பாதுகாப்பாக இருக்கும் வகையில் கிருமி நாசினி பவுடர் துாவப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog