Search This Blog
Saturday, April 04, 2020
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கரோனா வைரஸ் பாதிப்பில் ஆண்கள் தான் அதிக அளவு உயிரிழக்கின்றனர் என சமீபத்திய ஆய்வு முடிவில் தகவல் வெளியாகியுள்ளது.
கரோனா வைரஸால் உலக அளவில் இதுவரை 11 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்படைந்துள்ளனர். அதேபோல 2.5 லட்சத்திற்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். கரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 60 ஆயிரத்தை நெருங்குகிறது.
இந்த நிலையில், கரோனா வைர தொற்றால் பெண்களைவிட ஆண்கள் தான் அதிகமாக உயிரிழக்கின்றனர் என ஆய்வு முடிவில் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, சீனா, இத்தாலி, தென் கொரியா போன்ற நாடுகளில் பெண்களைவிட ஆண்கள்தான் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
சீனாவில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிப்படைந்த ஆண்களில் 2.8 % பேர் உயிரிழந்ததாகவும், பெண்களில் 1.7% பேர் மட்டுமே உயிரிழந்துள்ளதாகவும் ஆய்வு முடிவுகள் கூறுகிறது. இதற்கான காரணமாக, ஆண்களை விட பெண்களுக்கு இயல்பாகவே நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருப்பதுதான் என்று கூறுகின்றனர் அறிவியலாளர்கள். மேலும், பெண்கள் சுத்தமாக தங்களை வைத்துக்கொள்கின்றனர் எனவும் ஆண்கள் அவ்வப்போது கை கழுவுவதில்லை எனவும் தெரிவிக்கின்றனர்.
ஆண்கள் அதிகம் உயிரிழப்பதற்கான காரணமாக மற்றொன்றும் பரவலாக சொல்லப்படுகிறது. அதாவது, ஆண்கள் அதிகமாக புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துதல் போன்ற பழக்கவழக்கங்களால் எளிதில் அவர்களை கரோனா தொற்று உயிரிழக்கச்செய்கிறது எனவும் கூறுகின்றனர்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
Home
CORONA
INFORMATION
கரோனாவால் ஆண்கள்தான் அதிக அளவில் உயிரிழக்கின்றனரா? - ஆய்வில் வெளியாகியுள்ள தகவல் இதோ.!
கரோனாவால் ஆண்கள்தான் அதிக அளவில் உயிரிழக்கின்றனரா? - ஆய்வில் வெளியாகியுள்ள தகவல் இதோ.!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.