👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கொரோனா பிரச்சனை காரணமாக சி.பி.எஸ்.இ., மத்திய திறந்தவெளி கல்வி அமைப்புகள் மற்றும் பல்வேறு தேர்வு வாரிய பள்ளி தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. ஏப்ரல் 14-ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருப்பதால் உடனடியாக தேர்வு நடத்தும் வாய்ப்பு இல்லை.
எனவே ஊரடங்கு முடிந்ததும் தேர்வு நடத்துவது பற்றி ஆய்வு செய்ய உள்ளனர். இதுபற்றி மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
தள்ளி வைக்கப்பட்ட அனைத்து தேர்வுகளையும் ஏப்ரல் கடைசி வாரத்தில் தொடங்கி மே மத்தியில் முடிக்கலாம் என திட்டமிட்டு இருக்கிறோம். 14-ந்தேதி ஊரடங்கு நிறைவு பெற்றதும் இதுபற்றி அதிகாரிகள் கூடி ஆலோசனை நடத்துவோம்.
அதில் முடிவு எடுக்கப்பட்டு தேர்வு தேதி அறிவிக்கப்படும். ஏற்கனவே நடந்த தேர்வுகளுக்கான பரீட்சை பேப்பர் திருத்தும் பணி நின்றுவிட்டது. அவையும் தொடங்கப்படும். அதன்பிறகு தேர்வு நடத்தப்படும் விடைத்தாள்களையும் திருத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு ஜூன் மாதத்தில் தேர்வு முடிவு வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. அதனால் பள்ளி மாணவர்களுக்கான தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. ஏப்ரல் 14ம் தேதிக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டு வழக்கம் போல, பணிகள் தொடங்கிய பிறகு தேர்வு நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிபிஎஸ்இயை பொறுத்தவரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தேர்வுகளை எப்போது நடத்துவது என்பது குறித்து ஏப்ரல் 14ம் தேதிக்கு பிறகுதான் ஆலோசிக்கப் போவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதில் ஏப்ரல் இறுதி அல்லது மே மாதத்தில் தேர்வு நடத்தலாம் என்று முடிவு எடுக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.