வரும் 27ம் தேதி பொது தேர்வை எதிர்கொள்ளும் வகையில் கடந்த ஒரு வருடமாக உழைப்பை நாம் வழங்கி வந்தோம்.
தற்போது பேரவையில் தமிழக முதல்வர் அவர்கள் பத்தாம் வகுப்பு தேர்வு ஒத்திவைப்பு என்ற தகவலை வழங்கியுள்ளார்.
மேலும் சூழ்நிலையை பொறுத்து ஏப்ரல் 15 முதல் தேர்வை துவங்கலாம் என ஆலோசித்து வருகின்றனர்.
அது கோரோனா பரவலை பொறுத்து மாறுபடும்.
எனவே கூடுதலாய் 25 நாட்கள் நமக்கு தேர்விற்கு தயாராக வாய்ப்பு கிடைத்துள்ளது.
விடுமுறை தினங்களை திருப்புதலுக்காக பயன்படுத்துங்கள்.
ஆலோசனை பெற ஆசிரியர்களுக்கு போன் செய்யுங்கள்.
இந்த 25 நாட்கள் இடைவிடுத்து _ நேரடியாக தேர்விற்கு செல்லுதல் நிச்சயம் உங்களது ஒரு வருட உழைப்பின் பலனை முழுமையாக தராமல் போகலாம்.
காலை 6- 8 கணிதம்
காலை 9- 11 ஆங்கிலம்
மதியம் 11- 1 அறிவியல்
மாலை 4 - 6 தமிழ்
மாலை 6 - 8 ச.அறிவியல்
என இயன்றவரை காலத்தை உபயோகமாய் பயன்படுத்துங்கள்.
உடனிருந்து வழிநடத்த சூழல் இல்லாததால் - நீங்களே ஆசிரியர் நீங்களே மாணவர்.
உங்களது எதிர்கால வளர்ச்சிக்காக முயற்சிகளை பயிற்சிகளை முன்னெடுங்கள்.
தேர்வு குறித்த அடுத்த கட்ட அறிவிப்புகள் தொலைகாட்சி செய்திகள் வாயிலாக தெரிந்து கொள்ளுங்கள்
* பழம் , காய்கறிகள் கூடுதலாய் சேர்த்து கொள்ளுங்கள்.
* 6 முறையாவது கைகளை கழுவுங்கள்.
* இயன்றவரை வெளிவருவதை ஒன்று கூடுவதை தவிருங்கள்
கொரோனாவை கொள்வோம்.உடன் பொது தேர்விலும் வெல்வோம்.
வாழ்த்துகள்.
- பத்தாம் வகுப்பு போதிக்கும் ஆசிரியர்கள் சார்பாக.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.