Breaking

Monday, March 02, 2020

ராணுவ கல்லுாரி படிப்பு விண்ணப்பம் வரவேற்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., வாயிலாக, இந்திய ராணுவ கல்லுாரி வெளியிட்ட செய்திக்குறிப்பு:உத்தரகண்ட் மாநிலம், டேராடூனில் உள்ள ராஷ்டிரிய இந்திய ராணுவ கல்லுாரியில், 2021ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு, ஜூன், 1, 2ல், நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது.
இந்த கல்லுாரியில், 8ம் வகுப்பு முதல், ராணுவத்திற்கான பட்டப்படிப்பு வரை மாணவர்கள் படிக்கலாம். ஆனால், எட்டாம் வகுப்பில் மட்டுமே மாணவர்கள் சேர்க்கப்படுவர். ஏழாம் வகுப்பு முடித்தவர்கள் அல்லது ஏழாம் வகுப்பு படித்து கொண்டிருப்போர் மட்டும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு, முதலில் எழுத்து தேர்வும், பின்னர் நேர்முக தேர்வும் நடத்தப்படும்.
தேர்வில் பங்கேற்பதற்கான விண்ணப்ப படிவம் பெற, அதற்கான கட்டணத்தை, வங்கி வரைவோலையாக எடுத்து, விண்ணப்பம் வேண்டி, கைப்பட கடிதம் எழுதி, 'கமாண்டன்ட், இந்திய ராணுவ கல்லுாரி, டேராடூன், உத்தரகண்ட், அஞ்சல் குறியீட்டு எண் - 248 003' என்ற முகவரிக்கு, அனுப்ப வேண்டும். பின், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, வரும், 31ம் தேதிக்குள் கிடைக்குமாறு, அனுப்ப வேண்டும். கூடுதல் விபரங்களை, www.rimc.gov.in என்ற, இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog