Breaking

Thursday, March 05, 2020

கொரோனா வைரஸ் நமக்கு வராமல் பாதுகாத்து கொள்வது எப்படி ? - நோயின் அறிகுறிகள் என்னென்ன ?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கொரோனா வைரஸ் - விழிப்புணர்வு செய்தி - மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியீடு கொரோனா வைரஸ் ( nCov - 2019 ) கொரோனா வைரஸ் என்பது மனிதர்களுக்கு சளி , இருமல் , காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் ஆகியவற்றை ஏற்படுத்தக் கூடிய ஒருவகை வைரஸ் கிருமியாகும் . சீனாவின் வூகான் நகரத்தில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது . இது விலங்குகளிலிருந்து மனிதர்களுக்கு பரவி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது . நோயின் அறிகுறிகள் : - காய்ச்சல் , இருமல் மற்றும் சளி - உடல் சோர்வு - ஒரு சிலருக்கு மூச்சுத் திணறல் ஏற்படும் . கொரோனாவைரஸ் நோய் பரவும் விதம் : நோய் அறிகுறிகள் கண்ட நபர் இருமும் போதும் , தும்மும் போதும் , வெளிப்படும் நீர்த் திவலைகள் மூலம் நேரடியாக பரவுகிறது . மேலும் இருமல் மற்றும் தும்பல் மூலம் வெளிப்படும் கிருமிகளை உடைய நீர்த் திவலைகள் படிந்துள்ள பொருட்களை தொடும்பொழுது கைகள் மூலமாகவும் பரவுகிறது .
நோய் தடுப்பு நடவடிக்கைகள் : தினமும் 10 முதல் 15 முறை சோப்பு போட்டு , நன்கு தேய்த்து கழுவ வேண்டும் . இருமும் போதும் தும்மும் போதும் வாய் மற்றும் மூக்கை கை குட்டை கொண்டு மூடி கொள்ள வேண்டும் . சிகிச்சை தரும் அனைத்து மருத்துவமனைகளிலும் கிருமி நாசினி கொண்டு சுத்தமாக துடைத்து பராமரித்தல் வேண்டும் . சிகிச்சைகள் சளி , இருமல் மற்றும் காய்ச்சல் , போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனே அருகில் உள்ள மருத்துவரை அனுகவும் . இளநீர் , ஓ . ஆர் . எஸ் , கஞ்சி போன்ற நீர்ச்சத்து மிகுந்த ஆகாரங்களை பருகுதல் வேண்டும்
நேற்றுவரை கொரோனா பாதிப்பு வெறும் 6 ஆக இருந்த நிலையில், தற்போது 28 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனா பரவுவதை தவிர்க்கும் வகையில் பள்ளிகளில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாநில அரசுகளுக்கு மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியால் அனைத்து மாநிலங்களுக்கும் மனிதவள மேம்பாட்டுத்துறை அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பள்ளி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தியுள்ளது. இருமல், தும்மல் போன்றவை ஏற்படும்போது கை குட்டையை பயன்படுத்துதல் போன்ற அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. காய்ச்சல் போன்றவை ஏற்பட்டால் பள்ளி, பொது இடங்களுக்கு செல்வதை மாணவர்கள் தவிர்க்க வேண்டும். மாணவர்கள் மத்தியில் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகம் அந்த மாநில அரசுகள் விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும். அடிக்கடி கை கழுவுதல், தும்மல் ஏற்படும் நேரத்தில் கைக்குட்டை அல்லது டிஷ்யூ பேப்பர்கள் பயன்படுத்த வேண்டும். முழுநீள கை சட்டையை அணியவேண்டும். தொற்றுக்கள் பரவாவண்ணம் இருப்பதற்கான பயிற்சியை கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog