Breaking

Sunday, March 01, 2020

புறநானுாறு குறித்த ஓவியப் போட்டி - மார்ச் 25 கடைசி தேதி!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
வடஅமெரிக்க தமிழ் சங்கப் பேரவை மற்றும்அட்லாண்டா மாநகர தமிழ்ச் சங்கங்கள் இணைந்து, புறநானுாறு குறித்த சர்வதேச ஓவியப் போட்டியை நடத்த உள்ளன. இதுகுறித்து, அந்த அமைப்புகள் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பு:தமிழர்களின் பழமையான வாழ்க்கையை வெளிப்படுத்தும் வகையில், வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவை மற்றும் அட்லாண்டா மாநகர தமிழ்ச் சங்கங்கள் இணைந்து, சர்வதேச ஓவியப் போட்டி நடத்த உள்ளன. 18 வயதுக்கு மேல் உள்ள ஓவியர்கள், இந்த போட்டியில் பங்கேற்கலாம்.'பள்ளமாக இருக்கிறதா, மேடாக இருக்கிறதா, காடாக இருக்கிறதா, மலையாக இருக்கிறதா என்பதல்ல; ஒரு நாட்டின் சிறப்பு; அந்த நாட்டில் உள்ள மக்களின் பண்பைப் பொறுத்தது' என்பதே பொருள்.
இதற்கேற்ற வகையில், 'நாடாகு ஒன்றோ காடாகு ஒன்றோ; அவலாகு ஒன்றோ, மிசையாகு ஒன்றோ; எவ்வழி நல்லவர் ஆடவர், அவ்வழி நல்லை; வாழிய நிலனே' என்னும், அவ்வையார் எழுதிய, புறநானுாற்றுப் பாடல் வரிகளுக்கு ஏற்ப, ஓவியம் வரைய வேண்டும். ஓவியங்கள், 27 செ.மீ., நீளமும், 20 செ.மீ., அகலமும் உள்ளதாக இருக்க வேண்டும். எந்த வகை ஓவியமாகவும் இருக்கலாம். ஓவியங்களை, மார்ச், 25க்குள், 'atlantaworldart2020@fetna.org' என்ற, 'இ - மெயில்' முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் தகவல்களை, fetnaconventio.org/sessions/art-competiontion-2020 என்ற, இணையதள பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog