👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
GATE Answer Key 2020: கேட் தேர்வு விடைக்குறிப்பு எப்போது வெளியாகும் தெரியுமா?
கேட் தேர்வு என்பது (Graduate Aptitude Test in Engineering) இந்தியாவில் உள்ள ஐஐடி, என்ஐடி, அண்ணா பல்கலைக் கழகம் உள்ளிட்ட உயர்ந்த கல்வி நிறுவனங்களில் எம்.இ, எம்.டெக் படிக்க மத்திய அரசால் நடத்தப்படும் தேர்வாகும். இந்திய அறிவியல் கழகத்தில் சிவில் துறையில் மேற்படிப்புகளை படிக்கவும், இந்திய மேலாண்மை கழகத்தில் எம்.பி.ஏ படிக்கவும் இந்த தேர்வு மதிப்பெண் முக்கியப் பங்கு வகிக்கிறது.
தற்போது, கடந்த பிப்ரவரி 1, 2, 9 ஆகிய தேதிகளில் இந்த கேட் தேர்வு நடைபெற்றது. டெல்லி ஐஐடி சார்பில் சுமார் 25 தாள்களுக்கு நடைபெற்ற கேட் தேர்வு 2020 விடைக்குறிப்புகள் எப்போது வெளியாகும் என தேர்வர்கள் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், தற்போது கேட் தேர்வு விடைக்குறிப்புகள் (GATE Answer Key 2020) வெளியாகும் தேதி, நேரம் உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. கேட் நிர்வாகத்தின்
https://gate.iitd.ac.in/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, கேட் தேர்வு விடைக்குறிப்புகள், வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி வெளியிடப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து பிப்ரவரி 21 ஆம் தேதி வரையில் ஆன்லைனில் வழியாக கேட் விடைக்குறிப்புகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.