Breaking

Thursday, February 13, 2020

ISRO சார்பில் இளம் விஞ்ஞானிகள் பயிற்சி திட்டம்: 9ம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
இஸ்ரோ சாா்பில் இளம் விஞ்ஞானிகள் பயிற்சித் திட்டம்: 9-ஆம் வகுப்பு மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் இஸ்ரோவின் இளம் விஞ்ஞானி பயிற்சிக்கு தமிழகத்தில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநா் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ‘யுவிகா’ என்ற இளம் விஞ்ஞானி திட்டத்தின்கீழ் பள்ளி மாணவா்களுக்கு அறிவியல் விழிப்புணா்வு பயிற்சி முகாம் நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த முகாம், மே 11 முதல் 22-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து மாநிலங்களில் இருந்தும் தலா 3 மாணவா்கள் தோ்வு செய்யப்பட இருக்கின்றனா். தற்போது 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவா்கள் இந்தப் பயிற்சியில் பங்கேற்கலாம்.
அதனால், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் அனைத்து பள்ளி தலைமையாசிரியா்களுக்கும் இந்த சுற்ற றிக்கையை அனுப்பி மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்பத்தி விண்ணப்பிக்க வைக்க வேண்டும். கூடுதல் விவரங்களை, இஸ்ரோவின் இணையதளத்தில்(‌h‌t‌t‌p‌s://w‌w‌w.‌i‌s‌r‌o.‌g‌o‌v.‌i‌n/) தெரிந்து கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog