Breaking

Sunday, February 23, 2020

ஹூபர்ட் ஹம்ப்ரி பெல்லோஷிப்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
புல்பிரைட் திட்டத்தின் கீழ் ஒன்று, ஹூபர்ட் எச் ஹம்ப்ரி பெல்லோஷிப்.
முக்கியத்துவம்
புல்பிரைட் நேரு உதவித்தொகை திட்டங்கள் பிரத்யேகமாக இந்தியர்களுக்கு வழங்கப்படும் நிலையில், ஹூபர்ட் எச். ஹம்ப்ரி பெல்லோஷிப் வளரும் நாடுகளை சேர்ந்தவர்களுக்கு வழங்கப்படுகிறது.
அமெரிக்காவின் முன்னாள் துணைத் தலைவரான ஹூபர்ட் எச். ஹம்ப்ரே நினைவாக 1978ம் ஆண்டு முதல் இத்திட்டம் செயல்படுகிறது.
யாரெல்லாம் பயன்பெறலாம்?:
அரசு துறைகளில் உள்ள கொள்கை வகுப்பாளர்கள், திட்டமிடுபவர்கள், நிர்வாகிகள் மட்டுமின்றி, தனியார் துறைகள், அரசு சாரா நிறுவனங்களை சேர்ந்தவர்கள் மற்றும் பொது சேவை அர்ப்பணிப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம்.
பிரிவுகள்:
விவசாயம் மற்றும் கிராமப்புற வளர்ச்சி; தொடர்பியல்/ இதழியல்; பொருளாதார வளர்ச்சி; கல்வி நிர்வாகம், திட்டமிடல் மற்றும் கொள்கை; நிதி மற்றும் வங்கி; கல்வி நிர்வாகம்; எச்.ஐ.வி / எய்ட்ஸ் கொள்கை மற்றும் தடுப்பு; மனித வள மேலாண்மை; சட்டம் மற்றும் மனித உரிமைகள்; இயற்கை வளங்கள், சுற்றுச்சூழல் கொள்கை மற்றும் காலநிலை மாற்றம்; பொது சுகாதார கொள்கை மற்றும் மேலாண்மை; பொது கொள்கை பகுப்பாய்வு மற்றும் பொது நிர்வாகம்; கல்வி, சிகிச்சை மற்றும் தடுப்பு; தொழில்நுட்ப கொள்கை மற்றும் மேலாண்மை; நகர்ப்புற மற்றும் பிராந்திய திட்டமிடல் ஆகிய பிரிவுகளில் இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.
பயன்கள்:
இத்திட்டத்தில் தேர்வு செய்யப்படுபவர்கள் 10 மாத காலம் அமெரிக்காவில் தனித்துவ அனுபவத்தை பெறலாம். அதற்கான போக்குவரத்து செலவு, விமானக் கட்டணம் உட்பட பல்வேறு செலவுகளையும் இத்திட்டமே ஏற்றுக்கொள்ளும்.
ஆங்கில அறிவு: எழுதுதல் மற்றும் பேசுதலில் ஆங்கில மொழிப் புலமையை நிரூபிக்கும் வகையில் டோபல் தேர்வை எழுத வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 15
விபரங்களுக்கு: https://www.humphreyfellowship.org/
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog