Budget 2020: கல்வித்துறைக்கு 99,300 கோடி ரூபாய் ஒதுக்கீடு - ஆசிரியர்களுக்கு சிறப்பு படிப்புகள்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, February 01, 2020

Comments:0

Budget 2020: கல்வித்துறைக்கு 99,300 கோடி ரூபாய் ஒதுக்கீடு - ஆசிரியர்களுக்கு சிறப்பு படிப்புகள்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் கல்வித் துறைக்கு என 99 ஆயிரத்து 300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் புதிய கல்விக்கொள்கை விரைவில் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் 2020-21 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இதனை தாக்கல் செய்தார். அப்போது, கல்வித் துறைக்கு என எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்பது தொடர்பாக நிர்மலா சீதாராமன் பேசினார். அப்போது அவர் பேசுகையில்,
நடப்பு ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் கல்வித்துறைக்கு 99,300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. திறன் மேம்பாட்டிற்கு 3 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், வெளி வர்த்தகத்தை ஈர்க்கும் வகையில் கல்வித் துறையில் சிறப்பு நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் விரைவில் புதிய கல்விக்கொள்கை அமல்படுத்தப்படும். அஅதோடு மட்டுமின்றி இளம் பொறியாளர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கும் வகையில் புதிய திட்டங்கள் கொண்டு வரப்படும். தேசிய காவல் பல்கலைக்கழகம் (National Police University), தேசிய தடவியல் பல்கலைக்கழகம் (National Forensic University) உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் அமைக்கப்படும். ஆசிரியர்கள், செவிலியர்கள், பாராமெடிக்கல் உள்ளிட்ட ஊழியர்களுக்கு சிறப்பு படிப்புகள் கொண்டு வரப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
2020- 2021 ம் ஆண்டுக்கான வருமான வரி குறைந்தது
*2020 மற்றும் 21 ஆம் ஆண்டுக்கான வருமான வரி விகிதங்களை குறைத்து பட்ஜெட்டில் புதிய அறிவிப்பை வெளியிட்டார் நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன்
*ரூபாய் 5 லட்சம் வருமானம் ஈட்டுவோர் வரி செலுத்த தேவையில்லை-நிர்மலா சீதாராமன்
*ரூபாய் 5 லட்சம் முதல் 7.5 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோருக்கு இனி 20 சதவீதத்திற்கு பதிலாக 10% வரி செலுத்தினால் போதுமானது- நிதியமைச்சர்
*7.5 லட்சம் ரூபாயிலிருந்து 10 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டுவோர் 20 சதவீத வரியிலிருந்து 15சதவீத வரி செலுத்தினால் போதுமானது
*ரூ 10 லட்சம்- 12.5 லட்சம் வருமானம் ஈட்டுவோர் 20 சதவீத வரி செலுத்தினால் போதுமானது
*12.5 லட்சம் முதல் 15 லட்சம் வரை 25% வரியும்
*15 லட்சத்திற்கும் மேல் வருமானம் ஈட்டுவோர் பழைய வரியான 30 % செலுத்த வேண்டும் என நிர்மலா சீத்தாராமன் அறிவிப்பு
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews