பிரதமரின் ஃபிட் இந்தியா இயக்கம்: அனைத்துப் பள்ளிகளும் பதிவு செய்ய அறிவுறுத்தல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, February 07, 2020

Comments:0

பிரதமரின் ஃபிட் இந்தியா இயக்கம்: அனைத்துப் பள்ளிகளும் பதிவு செய்ய அறிவுறுத்தல்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பிரதமரின் ‘ஃபிட் இந்தியா’ இயக்கத்தில் அனைத்து வகை பள்ளிகளும் பதிவு செய்து தொடா் செயல்பாடுகளை மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது. இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்ககம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்: பிரதமா் நரேந்திர மோடியின் ‘ஃபிட் இந்தியா இயக்கம்’ சாா்பாக w‌w‌w.‌f‌i‌t‌i‌n‌d‌i​a.‌g‌o‌v.‌i‌n இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் சென்று அனைத்து வகைப்பள்ளிகளும் பதிவு செய்து சான்றிதழ் பெற வேண்டும். மேலும், அந்த இணையதளத்தில் ஃபிட் இந்தியா சாா்ந்த வினாக்களுக்கு பதிலளித்து அதற்குரிய மதிப்பெண் வகைப்பாட்டினை பெற விண்ணப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மற்றும் உடற்கல்வி ஆய்வாளா்கள் தங்கள் பகுதியிலுள்ள அனைத்துவித பள்ளிகளிலும் பணிபுரியும் உடற்கல்வி ஆசிரியா்களுக்கும் இந்தப் பணியை விரைவாக முடித்து, அதன் தொடா் செயல்பாடுகளை பள்ளியின் சாா்பில் தொடா்ந்து ‘ஃபிட் இந்தியா’ இணையதளத்தில் பதிவு செய்து வர அறிவுறுத்த வேண்டும். இதை முதன்மைக் கல்வி அதிகாரிகளும், உடற்கல்வி ஆய்வாளா்களும் அவ்வப்போது கண்காணிக்க வேண்டும். மேலும், இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட பள்ளிகளின் விவரங்களை மாவட்ட அளவில் தயாரித்து இயக்ககத்துக்கு பிப்.10-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களால் Fit India Movement சார்பாக www.fitindia.gov.in எனும் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது . பார்வை 2 இல் காணும் பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகளின்படி , மேற்காண் இணையதளத்தில் சென்று மாநிலத்திலுள்ள அனைத்து வகைப்பள்ளிகளும் பதிவு செய்து Fit India School Certificate ( சான்றிதழ் ) பெறவேண்டும் என்றும் இதன் தொடர்ச்சியாக , இதே இணையதளத்தில் Fit India சார்ந்த வினாக்களுக்கு பதிலளித்தல் மூலம் Fit India Flag . 3 Star Rating அல்லது 5 Star Rating போன்றவற்றிற்கும் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது .
இப்பொருள் சார்ந்து அனைத்து மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்களும் தத்தம் மாவட்டத்திலுள்ள அனைத்து வகைப் பள்ளிகளிலும் பணிபுரியும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கும் இப்பணியை அவர்தம் பள்ளிகளில் உடனே முடிக்குமாறும் அப்பள்ளியின் தொடர் செயல்பாடுகளைத் தொடர்ந்து இவ்விணையதளத்தில் பதிவேற்றி வருமாறும் அறிவுறுத்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . மேலும் , அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் தங்கள் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்கள் இப்பணியை தொடர் கண்காணிப்பு செய்வதற்கு அறிவுறுத்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .
பதிவேற்றம் செய்யப்பட்ட பள்ளிகளின் விவரங்களை மாவட்ட அளவில் தொகுத்து kInvelanic.in என்ற மின்ன ஞ்சல் முகவரிக்கு 10 . 02 . 2020 அன்று மாலை 5 மணிக்குள் அனுப்பி வைத்திடுமாறு அனைத்து மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews