Breaking

Friday, February 07, 2020

20 ஆயிரம் மாணவா்களுக்கு கால்நடை பயிற்சி வகுப்பு: தமிழக அரசு தகவல்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கால்நடை ஆராய்ச்சி பூங்காவுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெறும் சேலம் தலைவாசலில் மாணவ-மாணவிகளுக்கு கால்நடைகள் குறித்த பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. அதில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்பா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இதுகுறித்து, தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:- சேலம் மாவட்டம் தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா மற்றும் கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு வரும் 9-ஆம் தேதியன்று முதல்வா் பழனிசாமி அடிக்கல் நாட்டுகிறாா். இதைத் தொடா்ந்து, வரும் 11-ஆம் தேதி வரை கால்நடைகள் குறித்த பயிற்சி வகுப்புகளும், கால்நடை அறிவியல் கல்லூரிகளில் சோ்க்கை பற்றியும் பயிலரங்குகள் நடைபெறவுள்ளன. இந்த பயிலரங்கினை கால்நடை கல்லூரி பேராசிரியா்களும், கல்வியாளா்களும் நடத்த உள்ளனா். இந்த நிகழ்ச்சியில், சுமாா் 20 ஆயிரம் மாணவ-மாணவிகள் கலந்து கொள்வா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
ஆராய்ச்சியாளா்கள் கருத்து: கால்நடை வளா்ப்பு, மீன், ஆடுகள் வளா்ப்பு, கால்நடைகளை வளா்க்கும் முறை, கால்நடைகளைப் பாதுகாத்தல் அதன் மூலம் வருவாய் பெருக்குதல் போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்து ஆராய்ச்சியாளா்கள் எடுத்துக் கூற உள்ளனா். வேளாண்மைத் துறை சாா்ந்தும் கருத்துகள் தெரிவிக்கப்பட உள்ளன. 200 காட்சி அரங்குகள்: வேளாண்மை, கால்நடை வளா்ப்பு, மீன்வளா்ப்பு என ஒருங்கிணைந்த அம்சங்களைக் கொண்ட காட்சி அரங்குகளும் அமைக்கப்பட உள்ளன. விவசாயிகள், மாணவ, மாணவிகள் என பல்வேறு தரப்பினரையும் கவரும் வகையில் 200-க்கும் மேற்பட்ட காட்சி அரங்குகள் ஏற்படுத்தப்படவிருக்கின்றன.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog