Breaking

Thursday, February 06, 2020

புதிதாக பிரிக்கப்பட்ட 5 மாவட்டங்களில் காலியாக கிடக்கும் கல்வித்துறை பணியிடங்கள் : மார்ச் மாதத்துக்குள் ஆட்கள் நியமனம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
புதிதாக பிரிக்கப்பட்டுள்ள 5 மாவட்டங்களில் காலியாக பல பணியிடங்கள் உள்ளன. அனைத்து அலுவலர்கள் விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் புதிதாக தென்காசி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி ஆகிய 5 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த மாவட்டங்களுக்கு உடனடியாக கலெக்டர்கள், எஸ்.பி.கள், டிஆர்ஓக்கள் நியமனம் செய்யப்பட்டனர். அதேபோல் புதிய வருவாய் கோட்டங்களுக்கும் ஆர்டிஓக்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சில இடங்களில் ஆர்டிஓ பணியிடங்கள் காலியாக உள்ளது.தற்போது புதிய மாவட்டங்களில் முக்கிய அலுவலகங்களுக்கு அதிகாரிகள் இல்லாமல் உள்ளது. பெயரளவுக்கு கடந்த நவம்பர் மாதம் முதல் செயல்பட தொடங்கியுள்ளது. இருப்பினும் ஒவ்வொரு மாவட்டத்துக்கு தேவையான அரசு அலுவலர் பணியிடங்களும் நிரப்பப்படவில்லை. இதனால் புதிய மாவட்டத்தில் நிர்வாக பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வருவாய்த்துறை உயரதிகாரிகள் கூறியதாவது: புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் நிர்வாக ரீதியாக செயல்பட்டு வருகிறது. ஆனால் ஒவ்வொரு துறைக்கும் இன்னும் அதிகாரிகள் நியமனம் செய்யப்படவில்லை. இதனால் அதிகாரிகள் புதிய மாவட்டங்களையும் சேர்த்து கவனித்து வருகின்றனர். குறிப்பாக, ஊரக வளர்ச்சித்துறை, சுகாதாரத்துறை, கல்வித்துறை, வேளாண்மைத்துறை, மாவட்ட கருவூலம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு இன்னும் மாவட்ட அலுவலர்கள் நியமனம் செய்யப்படவில்லை.
வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் நிர்வாகரீதியாக அனைத்து அலுவலகங்களும் புதிய மாவட்டங்களில் செயல்பட தொடங்கும். அதற்குள் அனைத்து அலுவலர்களும் நியமனம் செய்யப்பட உள்ளனர். தற்போது வருவாய்த்துறையில் மட்டும் புதிய அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இன்னும் ஒருசில துறைகளில் உள்ள ஊழியர்களை மார்ச் மாதத்துக்குள் புதிய மாவட்டத்துக்கு பிரித்து கொடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதம் 31ம் தேதியுடன் நிதியாண்டு முடிவடைகிறது. ஏப்ரல் 1ம் தேதி முதல் புதிய மாவட்டங்கள் நிர்வாக ரீதியாக தனியாக செயல்பட தொடங்கும்.
காவல்துறையிலும் புதிய மாவட்டங்களில் பணிபுரிய விருப்பம் கேட்டு காவலர்களிடம் மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அந்த மனுக்களின் அடிப்படையில் பிரித்து தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்துக்கு எவ்வளவு காவலர் என டி.ஜி.பி. உத்தரவிடுவார். அதுவும் வரும் மார்ச் 31ம் தேதிக்குள் வழங்கப்படும். அதேபோல் சிறப்பு பிரிவுகளும் விரைவில் தொடங்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog