Search This Blog
Thursday, December 26, 2019
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
CLICK HERE TO WATCH THE VIDEO
எவ்வாறு ஓட்டளிப்பது என்பது குறித்து, வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் குறும்படத்தை, மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ளது.ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான, முதற்கட்ட ஓட்டுப்பதிவு நாளை மறுநாளும், இரண்டாம் கட்ட ஓட்டுப்பதிவு, வரும், 30ம் தேதியும் நடக்கிறது. ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி தலைவர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் என, நான்கு பதவிகளுக்கு, வாக்காளர்கள் ஓட்டளிக்க வேண்டும். இதற்காக, நான்கு ஓட்டு சீட்டுகள் பயன்படுத்தப்பட உள்ளன.
CLICK HERE TO WATCH THE VIDEO
தேர்தல் ஆணையம்இதனால், வாக்காளர்களிடம் குழப்பம் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. எனவே, எவ்வாறு ஓட்டளிப்பது என்பது குறித்து விளக்கும் வகையில், விழிப்புணர்வு குறும்படம் ஒன்றை, மாநில தேர்தல் ஆணையம் தயாரித்து வெளியிட்டுள்ளது.தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள, 'பூத் சிலிப்'புடன் ஓட்டுப்பதிவு மையங்களுக்கு, வாக்காளர்கள் செல்ல வேண்டும். பூத் சிலிப் கிடைக்காதவர்கள், ஓட்டுச்சாவடி முன் அமர்ந்திருக்கும், நிலை அதிகாரியிடம் பெற வேண்டும். ஓட்டுச்சாவடிக்குள் நுழைந்து, வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில், பூத் சிலிப்பை, அங்குள்ள அதிகாரியிடம் காண்பிக்க வேண்டும். ஆவணங்கள்வாக்காளர் அடையாள அட்டை அல்லது தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட, 11 ஆவணங்களில் ஒன்றையும் காண்பிக்க வேண்டும்.
CLICK HERE TO WATCH THE VIDEO
தொடர்ந்து, இடது கை ஆள்காட்டி விரலில், அழியாத மை வைக்கப்படும்.ஊராட்சி வார்டு உறுப்பினரை தேர்வு செய்வதற்கான, வெள்ளை நிற ஓட்டுச்சீட்டு; ஊராட்சி தலைவருக்கான, இளம் சிவப்பு நிற ஓட்டுச்சீட்டு; ஒன்றிய கவுன்சிலருக்கான, பச்சை நிற ஓட்டு சீட்டு; மாவட்ட கவுன்சிலருக்கான, மஞ்சள் நிற ஓட்டுக்கள், தனித்தனியாக அலுவலர்களால் வழங்கப்படும். பின், மறைவான பகுதிக்கு சென்று, ஓட்டளித்துவிட்டு, முறையாக மடித்து, ஓட்டுப்பெட்டியில் அவற்றை போட வேண்டும் என, அந்த குறும்படத்தில் விளக்கப்பட்டு உள்ளது. இதை, சமூக வலைதளங்கள், 'டிவி' சேனல்கள், செய்தி இணையதளங்கள் வாயிலாக பரப்பி, விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளை, மாநில தேர்தல் ஆணையம் துவக்கி உள்ளது.
CLICK HERE TO WATCH THE VIDEO
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
ஓட்டு போடுவது எப்படி: குறும்படம் வெளியீடு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.