முதுநிலை பட்டப்படிப்பு: இளநிலை பட்டப்படிப்பை நிறைவு செய்த 35 வயதிற்கு உட்பட்டவர்கள்.
ஆராய்ச்சி படிப்பு: முதுநிலை பட்டப்படிப்பை நிறைவு செய்த 40 வயதிற்கு உட்பட்டவர்கள்.
ஜெனரல் ஸ்காலர் புரொகிராம்: 12ம் வகுப்பை நிறைவு செய்த 45 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சீனியர் ஸ்காலர் புரொகிராம்: 50 வயதிற்கு உட்பட்ட முதுநிலை பட்டப்படிப்பை நிறைவு செய்தவர்கள் அல்லது பேராசிரியர்கள் விண்ணப்பிக்கலாம்.
உதவித்தொகை விபரம்:மொத்தம் 40 பேருக்கு சீன அரசாங்கம் கல்வி உதவித்தொகையை வழங்குகிறது. முழு உதவித்தொகை விபரங்களை கேம்பஸ் சீனா இணையதளம் வாயிலாக அறிந்துகொள்ளலாம். இந்திய அரசாங்கம், இந்த உதவித்தொகைக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள், இந்தியாவில் இருந்து சீனா செல்வதற்கான விமானக் கட்டணத்தை மற்றும் ஏற்றுக்கொள்கிறது.
முக்கிய குறிப்பு:இந்த உதவித்தொகைக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஓர் ஆண்டு சீன மொழி பயிற்சி வழங்கப்படும். அதன்பிறகே, அவர்கள் விண்ணப்பித்த படிப்பிற்கு அனுமதிக்கப்படுவர். மேலும், சின மொழியிலேயே அனைத்து படிப்புகளும் கற்பிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
விபரங்களுக்கு: https://mhrd.gov.in/
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.