'சமையல் காஸ்'க்கு கூடுதல் பணம்; புகார் தர எண்கள் வெளியீடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, December 11, 2019

Comments:0

'சமையல் காஸ்'க்கு கூடுதல் பணம்; புகார் தர எண்கள் வெளியீடு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
'சமையல் காஸ் சிலிண்டர் ரசீதில் உள்ள விலைக்கு மேல், வாடிக்கையாளர்கள் கூடுதல் தொகை வழங்க வேண்டாம்' என, பொதுத்துறையை சேர்ந்த, இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அந்நிறுவனம் விடுத்த செய்தி குறிப்பு: இண்டேன் சமையல் காஸ் சிலிண்டர்கள், தரம் மற்றும் எடை பரிசோதனை உறுதி செய்யப்பட்ட பின், வினியோகம் செய்யப்படுகின்றன. வினியோகஸ்தர்களால் வழங்கப்படும் ரசீதில் உள்ள, சில்லறை விலை தெளிவாக அச்சிடப்பட்டு இருக்கும்.
சில்லறை விலை என்பது, வாடிக்கையாளரின் சமையல் அறை வரை, சிலிண்டரை டெலிவரி செய்வதற்கான தொகை. ரசீதில் உள்ள விலைக்கு மேல், டெலிவரி செய்பவரிடம், கூடுதல் தொகை எதுவும் வழங்க வேண்டாம். இந்தியன் ஆயில் நிறுவனம், 'டிப்ஸ்' வழங்குவதை என்றும் ஆதரிப்பதில்லை.எனவே, ரசீதில் உள்ள விலைக்கு மேல் கேட்டால், வாடிக்கையாளர்கள், கீழ்காணும் தொலைபேசி எண்களில், காலை, 9:30 முதல் மாலை, 5:15 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.
சென்னை - 044 - 2433 9238, 2433 9246, 94440 85646
மதுரை - 0452 - 2533 956
திருச்சி - 0431 - 2740 066
கோவை - 0422 - 2247 396
மேலும், விபத்து மற்றும் சிலிண்டர் கசிவு போன்ற அவசர உதவிகளுக்கு, 1906 என்ற எண்ணிலும்; இதர புகார்களுக்கு, 1800 233 3555 என்ற, கட்டணமில்லா எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews