Breaking

Friday, December 06, 2019

பள்ளி மாணவர்களுக்கு கல்வி கற்க செயலி அறிமுகம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
பள்ளி மாணவர்களின் கல்வியை மேம்படுத்தும் வகையில் 'மது' என்னும் செல்போன் செயலியை ஒடிசா அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. மாநில் அரசின் சார்பில், கஞ்சம் மாவட்ட நிர்வாகம் இந்த செயலியை உருவாக்கி உள்ளது. ஒடிசாவின் முதல் பட்டதாரியும் வழக்கறிஞருமான உத்கல் கெளரவ் மதுசூதன் தாஸ் நினைவாக இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
மது செயலியை ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் நேற்று தொடங்கி வைத்துப் பேசினார். கஞ்சம் மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவர்களுடன் வீடியோ கான்ஃபரன்சிங் முறையில் கலந்துரையாடினார். அப்போது அவர் கூறும்போது, ''மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். மாநிலமும் நாடும் பெருமை கொள்ளும் வகையில் செயல்பட வேண்டும்'' என்றார். வீடியோக்கள் மற்றும் டுட்டோரியல்கள் மூலமாக மாணவர்கள் பாடங்களைக் கற்கும் வகையில் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. கல்வியாளர்கள் மற்றும் பாட நிபுணர்களின் உதவியோடு ஒடியா மொழியில் வீடியோ விளக்கங்களும் பயிற்சிகளும் இந்த செயலியில் உள்ளன. முதல் கட்டமாக மது செயலியில் 5 முதல் 8-ம் வகுப்புக்கான கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களுக்கான வீடியோக்களைத் தயாரித்து பதிவேற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog