Search This Blog
Saturday, November 02, 2019
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
இந்தியர்களின் வாட்ஸ் அப் தகவல்கள் திருடப்பட்டது தொடர்பாக கடந்த மே மாதமே அரசுக்கு தகவல் தெரிவித்ததாக வாட்ஸ் அப் நிறுவனம் கூறியுள்ளது. இந்தியாவில் பத்திரிக்கையாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்களின் வாட்ஸ் அப் தகவல்கள் உளவு பார்க்கப்பட்ட விவகாரத்தில் அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அதன்படி உளவு பார்க்கப்பட்ட தகவலை கடந்த மே மாதமே மத்திய அரசுக்கு வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து, இந்திய கணினி தாக்குதல் தடுப்பு அமைப்பான சி.இ.ஆர்.டி யிடம் உளவு பார்த்த தகவலை வாட்ஸ் அப் நிறுவனம் கூறியுள்ளது. ஆனால் பெகாசுஸ் என்ற மென்பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்டதையோ, எந்த வகையில் தகவல்கள் திருடப்பட்டன என்பது பற்றியோ அதில் கூறவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்துள்ள வாட்ஸ் அப் நிறுவனம் தனி நபர்களுக்கு வரும் தகவல்களை பாதுகாப்பதற்கே முன்னுரிமை தருவோம் என உறுதி அளித்துள்ளது.
மேலும் உளவு பார்த்தது தெரிந்த உடனே அந்த மென்பொருளை தயாரித்த என்எஸ்ஓ மீது வழக்கு தொடர்ந்ததையும் வாட்ஸ் அப் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. அமெரிக்காவின் சான் பிரான்சிஸ் கோவில் உள்ள நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கில் 20 நாடுகளில் வாட்ஸ் அப் தகவல்கள் உளவு பார்க்கப்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியர்களை உளவு பார்த்தது தொடர்பாக வாட்ஸ் அப் நிறுவனம் பதிலளிக்க மத்திய அரசு ஏற்கனவே நோட்டீஸ் வழங்கியிருக்கும் நிலையில், அந்நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் விளக்கம் அளித்திருக்கிறார். அதே நேரம் மத்திய அரசு நோட்டீஸுக்கு பதிலளிப்பது குறித்து அவர் ஏதும் தெரிவிக்கவில்லை. இதனை அடுத்து உலகம் முழுவதும் 1,400 பேரின் செல்போனில் உள்ள வாட்ஸ் அப் தகவல்கள் உளவு பார்க்கப்பட்டது தெரியவந்துள்ளது.
இந்தியாவில் உள்ள சில பயனாளர்களின் வாட்ஸ்ஆப் தகவல்கள் உளவு பார்க்கப்படுவதாக மே மாதமே இந்திய அதிகாரிகளை எச்சரித்து விட்டதாக வாட்ஸ்ஆப் நிறுவனம் பதிலளித்துள்ளது.
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள பெடரல் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள ஒரு வழக்கில் பேஸ்புக் நிறுவனத்துக்குச் சொந்தமான வாட்ஸ்ஆப் மொபைல் அப்ளிகேஷன் உதவியுடன், சுமார் 1400 பேர் கண்காணிக்கப்பட்டனர் என்ற தகவல் வெளியானது. பெகாசஸ் என்ற இஸ்ரேலிய ஸ்பைவேர் மென்பொருள் மூலம் அவர்கள் உளவு பார்க்கப்பட்டதாக வாட்ஸ்ஆப் நிறுவனம் கூறி இருந்தது. இந்தியர்கள் பலர் உளவு பார்க்கப்பட்டதாக கூறியதால், இது பற்றி நவ.,4 ம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வாட்ஸ்ஆப் நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பி இருந்தது.
இதனையடுத்து வாட்ஸ்ஆப் நிறுவன செய்தி தொடர்பாளர் இந்தியாவிற்கு அளித்துள்ள விளக்கத்தில், பயனாளர்களின் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை ஆகியவற்றிற்கே நாங்கள் அதிக முக்கியத்துவம் அளிக்கிறோம்.
இந்தியர்களின் கணக்குகள் உளவு பார்க்கப்படுவது குறித்து மே மாதமே இந்திய அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி, பாதுகாப்பு பிரச்னைகளை சரி செய்யம்படி கூறி இருந்தோம். சர்வதேச அரசு அமைப்புக்களிடமும் இதை வலியுறுத்தி இருந்தோம். என்எஸ்ஓ எனப்படும் உளவு மால்வேர் கணக்கர்களின் தகவல்களை குறிவைப்பதாக நாங்கள் கண்டறியந்த உடனேயே கோர்ட்டில் தெரிவித்து விட்டோம்.
இந்திய அரசின் பிரச்னையை நாங்கள் புரிந்து கொள்கிறோம். பாதுகாப்பு குறைபாடுகளை சரி செய்ய எங்களால் முடிந்த உதவிகளை செய்கிறோம். பயனார்கள் அனுப்பும் தகவல்களை பாதுகாக்க தேவையான அனைத்தையும் வாட்ஸ் ஆப் தொடர்ந்து மேற்கொள்ளும் என தெரிவித்துள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
Whatsapp தகவல்கள் உளவு விவகாரம் - Whatsapp பதில்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.