👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
மாறுதல் கலந்தாய்வில் அதிகாரிகள் முன் அழுது புரண்டதால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா 54, நேற்று முதன்மை கல்வி அலுவலகத்தில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்.திண்டுக்கல்லில் நவ.19ல் அரசுப்பள்ளி ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு நடந்தது. குஜிலியம்பாறை அய்யப்பட்டியை சேர்ந்த இந்திரா அய்யம்பாளைம் துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக 3 ஆண்டுகளாக உள்ளார்.கலந்தாய்வுக்கு அழைக்கவில்லை என முதன்மைக் கல்வி அலுவலர் மணிவண்ணன் முன் தரையில் உருண்டார். இதையடுத்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
நேற்று முதன்மைக் கல்வி அலுவலகம் வந்த அவர், 'தவறு எதுவும் செய்யவில்லை, சஸ்பெண்ட்' உத்தரவை ரத்து செய்ய வேண்டும். பள்ளியில் 2 குழந்தைகள் மட்டுமே உள்ளனர். அவர்களும் சரியாக வருவது இல்லை. ஒரு கையை துாக்க முடியாமல் சிரமப்படுகிறேன். இடமாறுதல் வழங்க வேண்டும்' என தரையில் அமர்ந்து அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தார்.அவரிடம் முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் சுரேஷ்பாபு, இன்ஸ்பெக்டர் அமுதா பேச்சுநடத்தினர். அவர் செல்லாததால் போலீஸ் ஸ்டேஷன் அழைத்துச்சென்றனர்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.