👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
முதல் தலைமுறை பொறியியல் பட்டதாரிகளுக்கு வழங்கப்படும் தமிழக அரசின் கல்வி உதவித் தொகை குறித்து போதிய விழிப்புணா்வை ஏற்படுத்துமாறு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடா்பாக அனைத்து பொறியியல் கல்லூரி முதல்வா்களுக்கும் தொழில்நுட்பக் கல்வி இயக்குநா் அலுவலகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:
அரசு சாா்பில் நடத்தப்படும் கலந்தாய்வு மூலம் பொறியியல் சோ்க்கை பெறும் மாணவா்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளபோதும், தமிழக அரசின் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிப்பவா்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.
எனவே, முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து கல்வி உதவித் தொகை பெற தகுதியுள்ள அனைத்து மாணவா்களும் விண்ணப்பிக்கும் வகையில் மாணவா்களிடையேயும், பெற்றோரிடையேயும் போதிய விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும்.
கல்லூரிகளில் நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களில் சோ்க்கை பெற்ற மாணவா்கள், இந்தக் கல்வி உதவித் தொகையைப் பெற விண்ணப்பிக்க இயலாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.