Breaking

Wednesday, November 27, 2019

எம்.டி., ஓமியோபதி படிப்பில் சேர வாய்ப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
எம்.டி., ஓமியோபதி மருத்துவ படிப்பில் சேர, நாளை காலை, 8:00 மணிக்கு நேரில் வர வேண்டும்' என, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறை அழைப்பு விடுத்துள்ளது. இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டில், எம்.டி., ஓமியோபதி படிப்பிற்கு, 10 இடங்கள் உள்ளன. இதற்கிடையில், இந்திய மருத்துவ முறையான, 'ஆயுஷ்' பட்ட மேற்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தேதியை, 30ம் தேதி வரை, மத்திய அரசு நீட்டித்துள்ளது.மேலும், அகில இந்திய ஆயுஷ் பட்ட மேற்படிப்பு தகுதி தேர்வின் தேர்ச்சிக்கு, 40 சதவீத மதிப்பெண் பெற வேண்டும்.
அதேநேரத்தில், மாற்றுத் திறனாளிகளுக்கு, 35 சதவீதமாகவும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு, 30 சதவீதமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இத்தகுதிகள் உடையோர், அரும்பாக்கத்தில் உள்ள, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறை இயக்குனர் அலுவலகத்தில், நாளை காலை, 8:00 மணிக்கு நேரில் வந்து, விண்ணப்பத்தை பெற்று, பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். அன்றைய தினம் பிற்பகலில் தகுதி உடையோருக்கு, இடங்கள் ஒதுக்கப்படும். மேலும், விபரங்களுக்கு, www.tnhealth.org என்ற இணைய தளத்தை பார்வையிடலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog