👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
அரசு கேபிள், 'டிவி'க்கான மாத கட்டணத்தை, அரசு நிர்ணயித்ததை விட அதிகமாக வசூலித்தால், வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு, இலவச தொலைபேசி எண்ணில் புகார் அளிக்கலாம்' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழக அரசு கேபிள், 'டிவி'க்கு, 30 லட்சத்துக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் உள்ளனர். இவர்களுக்கு சேவை வழங்க, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட, கேபிள் ஆப்பரேட்டர்கள் செயல்படுகின்றனர்.அரசு கேபிள், 'டிவி'க்கான மாத கட்டணம், 130 ரூபாயாக, சில மாதங்களுக்கு முன் குறைக்கப்பட்டது.
அத்துடன், சரக்கு மற்றும் சேவை வரியான, ஜி.எஸ்.டி., சேர்த்து, 154 ரூபாய் வசூலிக்கப்படும் என, தமிழக அரசு அறிவித்தது.ஆனால், அரசு நிர்ணயித்த இந்த கட்டணத்தை விட, கூடுதலாக, 50 முதல், 100 ரூபாய் வரை, ஆப்பரேட்டர்கள் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.
இது குறித்து, அரசு கேபிள், 'டிவி' அதிகாரிகள் கூறியதாவது:அரசு கேபிள், 'டிவி'க்கு, கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக, எங்களுக்கு புகார் எதுவும் வரவில்லை. கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆப்பரேட்டர்கள் மீது,
1800 425 2911 என்ற, இலவச தொலைபேசி எண்ணில் புகார் அளிக்கலாம். அந்த புகார் மீது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சம்பந்தப்பட்ட ஆப்பரேட்டர்களுக்கு, 'நோட்டீஸ்' அளித்து, அவர்களுக்கான உரிமம் ரத்து செய்யப்படும். அதனால், வாடிக்கையாளர்கள் தயங்காமல், இலவச எண்ணில் புகார் அளிக்கலாம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.