👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
'வனக்காவலர் பணிக்கான சான்றிதழ் சரி பார்ப்பு, உடல் தகுதி சரி பார்ப்பின் போது, ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுவோர், எதிர்காலத்தில் அரசு வேலைக்கான தேர்வுகளில் பங்கேற்க, நிரந்தர தடை விதிக்கப்படும்' என, வனத்துறை எச்சரித்துள்ளது.தமிழகத்தில், 564 வனக்காவலர் பணிக்கான ஆன்லைன் தேர்வு, அக்டோபர்முதல் வாரத்தில் நடந்தது. இந்த தேர்வில், தேர்ச்சி பெற்றவர்கள், 1:3 என்ற அடிப்படையில், சான்றிதழ், உடல் தகுதி சரி பார்த்தலுக்கு அழைக்கப்பட்டு உள்ளனர்.இவர்களுக்கான சான்றிதழ் சரி பார்ப்பு பணி, கிண்டி சிறுவர் பூங்கா வளாகத்தில், இன்று துவங்குகிறது. சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க வருவோருக்கு, வனத்துறை வெளியிட்டுள்ள அறிவுரைகள்:இந்த நிகழ்வின் போது, தேர்வர்கள் அதிகாரிகளின் வழிகாட்டுதல் படியே செயல்பட வேண்டும்.ஒழுங்கீன செயல்களில் யாராவது ஈடுபட்டால், அவர்கள் எதிர்காலத்தில், வனத்துறை நடத்தும் தேர்வுகள் மட்டுமின்றி, அரசு பணிக்கான அனைத்து தேர்வுகளிலும் பங்கேற்க முடியாத வகையில், தகுதி நீக்கம் செய்யப்படுவர்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.