👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
Go RT No:4083 விஜிலென்ஸ் ஆணையம் & லஞ்ச ஒழிப்புத் துறையின் கூடுதல் பொறுப்பு திரு.சண்முகம் IAS அரசு முதன்மை செயலாளர் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஊழல் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை கூடுதல் பொறுப்பு, தலைமை செயலரிடம் வழங்கப்பட்டதற்கு, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
ஊழல் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை ஆணையராக இருந்த மோகன் பியாரே, நேற்று முன்தினம் ஓய்வு பெற்றார்.அவர் வகித்து வந்த பொறுப்பு, தலைமை செயலர் சண்முகத்திடம், கூடுதலாக வழங்கப்பட்டு உள்ளது.அதேபோல், வருவாய் நிர்வாக ஆணையர் சத்ய கோபாலும், நேற்று முன்தினம் ஓய்வு பெற்றார். அவர் வகித்து வந்த பொறுப்பு, போக்குவரத்து துறை செயலர் ராதாகிருஷ்ணனிடம், கூடுதலாக ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், தன், 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:ஊழல் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு துறையின் கூடுதல் பொறுப்பு, தலைமை செயலர் சண்முகத்திடம் வழங்கப்பட்டிருப்பது, உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது.இது, ஆணையத்தின் சுதந்திரத்தை பறிக்கும். இந்த உத்தரவை உடனே ரத்து செய்து, அப்பதவிக்கு தனியாக, மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரியை, நியமிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.