👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups


பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளுக்கான நேரம் 2 மணி 30 நிமிஷங்கள் என்பதை 3 மணி நேரமாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான பாடத் திட்டம் மற்றும் பாடப் புத்தகங்களை மாற்றியமைக்க கடந்த 2017-ஆம் ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டது. இதற்காக உயர்நிலைக் குழுக்கள் அமைக்கப்பட்டு ஆசிரியர்கள், துறைசார் வல்லுநர்கள், கல்வியாளர்கள், பொதுமக்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. இதை அடிப்படையாகக் கொண்டு புதிய பாடத் திட்டம் உருவாக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக கடந்த கல்வி ஆண்டுகளில் அனைத்து வகுப்புகளுக்கும் புதிய பாடப் புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு வழங்கப்பட்டன. ஒப்பீட்டளவில் அதிகப் பாடங்களைக் கொண்டிருப்பதாகவும், எனவே தேர்வு எழுத நிர்ணயிக்கப்பட்டுள்ள நேரமான 2 மணி 30 நிமிஷத்தை கூடுதலாக அரை மணி நேரம் சேர்த்து 3 மணி நேரமாக மாற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நேரத்தை 3 மணி நேரமாக மாற்ற பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
கூடுதல் நேரம் தேவை: இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் கூறுகையில், புதிய பாடத் திட்டத்தின் காரணமாக மாணவர்கள் தேர்வெழுத கூடுதல் நேரம் தேவைப்பட்டது.
இதுதொடர்பாக பெற்றோர் மற்றும் கல்வியாளர்கள் தரப்பில் இருந்து அரசுக்கு கோரிக்கைகள் வந்தன.,அதன் அடிப்படையில், பள்ளிக் கல்வித் துறை செயலருடன் ஆலோசித்து, பொதுத் தேர்வுகளுக்கான நேரத்தை 2 மணி 30 நிமிஷங்களில் இருந்து 3 மணி நேரமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முறை இந்தக் கல்வியாண்டில் இருந்தே நடைமுறைக்கு வரும். இதுதொடர்பான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்றார்.
10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத கூடுதலாக அரை மணி நேரம் அதிகரிப்பு: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத கூடுதலாக அரை மணி நேரம் அதிகரிப்பு என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தரவு எழுத ஏற்கனவே உள்ள 2.30 மணி நேரத்தில் கூடுதலாக அரைமணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
10, 11, 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு எழுத கூடுதலாக அரைமணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சார்பில் பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. பொதுத் தேர்வு எழுத ஏற்கனவே இரண்டரை மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், தேர்வு நேரத்தை 3 மணி நேரமாக அதிகரித்து பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.
புதிய பாடத் திட்டத்தின் கீழ் இந்தாண்டு பொதுத் தேர்வுகள்
கடந்த ஜுலை மாதம், 2019-2020ம் கல்வி ஆண்டில், மார்ச்/ஏப்ரல் 2020-ல் நடைபெறவுள்ள 10, 11, 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் அட்டவணை[பள்ளிக்கல்வித் துறை சார்பில் வெளியிடப்பட்டது.அதன்படி பத்தாம் வகுப்புக்கு அடுத்த வருடம் மார்ச் 17ம் தேதி பொதுத்தேர்வு தொடங்கி, ஏப்ரல் 9ம் தேதி முடிவடைகிறது. பிளஸ் 1 மாணவர்களுக்கு அடுத்த வருடம் மார்ச் 4 மற்றும் 6 ஆகிய தேதிகளில் மொழி பாடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது. பின்னர், 11ம் தேதி முதல் 26ம் தேதி வரையில் அறிவியல், வணிகம், உயிரியல் உள்ளிட்ட பிரிவுகளுக்கான தேர்வுகள் நடைபெறுகிறது. இதே போல் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த வருடம் மார்ச் 2ம் தேதி பொதுத்தேர்வு தொடங்குகிறது. 2, 5 ஆகிய தேதிகளில் மொழி பாடங்களுக்கான தேர்வும், அதைத் தொடர்ந்து பிற பாடங்களுக்கான தேர்வும் நடைபெறுகிறது.
கூடுதல் நேரம் நடப்பு கல்வியாண்டிலேயே ஒதுக்கப்படும்
இந்நிலையில் 11ம் வகுப்பு கடந்த ஆண்டு புதிய பாடத் திட்டத்தின் அடிப்படையில் தேர்வு நடைபெற்ற நிலையில், இந்த ஆண்டு 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டத்தின் கீழ் தேர்வு நடைபெற உள்ளது.
புதிய பாடத் திட்டத்தின் படி நடத்தப்படும் தேர்வில் சிந்தித்து விடையளிக்கும் வினாத்தாள் இருக்கும். இந்நிலையில் மாணவர்கள் கேள்விகளுக்கு விடை அளிக்க கூடுதல் நேரம் தேவைப்படும் என்ற கோரிக்கை எழுந்ததால், அதற்கேற்றவாறு மாணவர்களின் நலன் கருதி கூடுதல் நேரம் வழங்க கல்வித்துறை முடிவு எடுத்துள்ளது. அதன் அடிப்படையில் 10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு தற்போது உள்ள 2.30 மணி நேரத்தை 3 மணி நேரமாக அதிகரித்து பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. அத்துடன் தேர்வு எழுதுவதற்கான கூடுதல் நேரம் நடப்பு கல்வியாண்டிலேயே ஒதுக்கப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.