Breaking

Wednesday, October 23, 2019

தீபாவளி விடுமுறை: மருத்துவத் தேர்வுகள் ஒத்திவைப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்ட நிலையில், அன்றைய தினம் நடைபெறவிருந்த மருத்துவப் படிப்புகளுக்கான தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன் வெளியிட்ட அறிவிப்பு: தீபாவளிக்கு மறுநாள் (அக். 28) பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் மருத்துவம் சார் அறிவியல் படிப்பு (Allied Health Science) மற்றும் இந்திய மருத்துவப் படிப்புகளுக்கான தேர்வுகள் நடைபெறவிருந்தன. இந்த நிலையில், அன்றைய தினம் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளதால், மருத்துவம் சார் அறிவியல் படிப்புக்கான தேர்வு நவம்பர் 4-ஆம் தேதியும், இந்திய மருத்துவப் படிப்புக்கான தேர்வு நவம்பர் 9-ஆம் தேதியும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog