👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அரசு பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளி கட்டிடங்களின் உறுதி தன்மையை ஆய்வு செய்ய நிபுணர் குழுவை அமைக்க வேண்டும் என மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் குன்னூர் தாலூக்காவுக்கு உட்பட்ட மேலூர் கோசகட்டியில் உள்ள பழமையான அரசு பள்ளி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது. இதில் மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத நிலையில் இந்த சம்பவத்தால கடந்த 22ம் தேதி நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால் மாணவர்கள் அதிஷ்டவசமாக உயிர்தப்பினர். இது குறித்து வெளியான செய்திகளின் அடிப்படையில் மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவர் மீனாகுமாரி தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து கொண்டார்.
அதனை தொடர்ந்து மழை காலங்களில் அரசு பள்ளி மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு தமிழகம் முழுவதிலும் உள்ள அரசு பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்ய கட்டுமானத்துறையில் அனுபவம் பெற்றவர்களை கொண்டு நிபுணர் குழுவை அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு தலைமை செயலருக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் குன்னூர் அருகே அரசு பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவம் தொடர்பாக 4 வாரங்களில் அறிக்கை அளிக்கவும் பள்ளிக்கல்வித்துறை இயக்குனருக்கு நீதிபதி மீனாகுமாரி உத்தரவிட்டுள்ளார்.
அரசு பள்ளி கட்டடங்களின் உறுதி தன்மை குறித்துஆராய, குழு ஏற்படுத்த வேண்டும்' என, மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுஉள்ளது.
நீலகிரி மாவட்டம், மேலுார் பகுதியில் பெய்து வரும் கனமழையால், அப்பகுதியில் உள்ள, அரசு பள்ளி கட்டடம் இடிந்து விழுந்துள்ளது.இந்த கட்டடம், 60 ஆண்டுகள் பழமையானதால், இடிந்து விழுந்ததாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து, மாநில மனித உரிமை ஆணையம்,வழக்குப் பதிவு செய்துள்ளது. ஆணைய தலைவர் மீனாகுமாரி பிறப்பித்த உத்தரவு:
மாணவர்களின் நலன் கருதி, தமிழகத்தில், பழமையான பள்ளி கட்டடங்களின் உறுதித் தன்மையை ஆராய, பொறியாளர்கள் அடங்கிய குழு ஏற்படுத்த வேண்டும். அந்த குழு, பள்ளி கட்டடங்களின் நிலையை ஆய்வு செய்து தரும் அறிக்கை அடிப்படையில், அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.இடிந்து விழுந்த பள்ளி கட்டடம் தொடர்பாக, பள்ளி கல்வி துறை இயக்குனர், நான்கு வாரங்களில் அறிக்கை அளிக்க வேண்டும்.இவ்வாறு, உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.