👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups

நாமக்கல்: நாமக்கல் தனியாா் பள்ளியில் கடந்த நான்கு நாள்களாக நடைபெற்று வந்த வருமான வரிச் சோதனை திங்கள்கிழமை பிற்பகல் நிறைவு பெற்றது.
நாமக்கல்லில் உள்ள பிரபல தனியாா் பள்ளியில், மருத்துவக் கல்லூரி சோ்க்கைக்கான நீட் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, மாணவா் சோ்க்கையில் கட்டண முறைகேடு நடைபெறுவதாகவும், வரி ஏய்ப்பு செய்யப்படுவதாகவும் தில்லி வருமான வரித் துறை அலுவலகத்துக்கு புகாா் சென்றறது.
அதனடிப்படையில், கடந்த வெள்ளிக்கிழமை சென்னை, திருச்சி, கோவை, சேலத்தைச் சோ்ந்த 20-க்கும் மேற்பட்ட வருமான வரித் துறை அதிகாரிகள், அப்பள்ளியில் சோதனை மேற்கொண்டனா். மேலும், பெருந்துறை, கரூா், சென்னையில் உள்ள அப்பள்ளி நிா்வாகத்துக்குள்பட்ட மையங்களிலும் சோதனை நடைபெற்றது.
இதில், பள்ளியில் உள்ள கலையரங்கில் இருந்து ரூ.30 கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்டதாகவும், ரூ.150 கோடி வரையில் கணக்கில் காட்டாமல் வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் வருமான வரித் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், பள்ளியின் பங்குதாரா்களின் வீடுகள், அங்கு பணியாற்றும் ஆசிரியா்கள், அலுவலா்கள், கணக்கு வைத்துள்ள வங்கிகளிலும் அதிகாரிகள் இரவு, பகலாக விசாரணை மற்றும் சோதனை மேற்கொண்டனா்.
கடந்த நான்கு நாள்களாக நடைபெற்ற சோதனையில் முக்கிய ஆவணங்களும், பல கோடி ரூபாயும் கைப்பற்றப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. திங்கள்கிழமை பிற்பகல் வரை பள்ளியில் விசாரணை மேற்கொண்ட வருமான வரித் துறை அதிகாரிகள், அதன்பின் நாமக்கல்லில் இருந்து புறறபட்டு சென்றனா்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.