👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கணினி ஆசிரியருக்கான தேர்வை தமிழ் மொழியில் நடத்தாதது ஏன்? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற கணினி ஆசிரியர் தேர்வில் ஆங்கிலத்தில் மட்டும் கேள்விகள் இடம்பெற்றிருந்ததாகவும், தமிழ்வழி கல்வி பயின்றோருக்கு 20 சதவீத இடஒதுக்கீடு தரப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பதாகவும் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இவ்வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கணினி ஆசிரியருக்கான தேர்வை தமிழ் மொழியில் நடத்தாதது ஏன்? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. மேலும் இதுதொடர்பாக செப்டம்பர் 6-ஆம் பதிலளிக்க ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட்டு வழக்கை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.
கடந்த ஜூன் மாதம் கணினி ஆசிரியர்களுக்கான தேர்வு நடைபெற்றது.அதில் ஆங்கிலத்தில் மட்டுமே கேள்விகள் கேட்கப்பட்டன என்றும், தமிழ் வழியில் பயின்றோர்க்கு 20% இடஒதுக்கீடு வழங்கப்பட்டதாகவும் தேர்வர்கள் வழக்கு தொடர்ந்தனர்.இதனை விசாரித்த உயர்நீதிமன்றம் தமிழ் மொழியில் ஏன் கேள்விகள் கேட்கப்படவில்லை என்று ஆசிரியர் தேர்வு வாரியம் வரும் 6-ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
Click Here To Watch Video
தமிழகத்தில் கணினி ஆசிரியருக்கான தேர்வை தமிழ்மொழியில் நடத்தாதது ஏன் என்று ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. தமிழகத்தில் அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியருக்கான தேர்வு தொடர்பாக கடந்த மார்ச் மாதம் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பாணை வெளியிட்டது. அதில், தமிழ் வழி கல்வி பயின்றோருக்கு 20 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. கடந்த ஜூன் மாதம் 23 மற்றும் 27ம் தேதிகளில் நடந்த தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் ஆங்கிலத்தில் மட்டுமே இடம்பெற்றிருந்தன. இந்நிலையில், எந்த மொழியில் தேர்வு நடத்தப்படும் என்று குறிப்பிடாமல் ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்பட்ட தேர்வை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் எனக் கோரி தமிழ்வழி கல்வி பயின்ற மதுரையை சேர்ந்த தயனா உட்பட 5 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, எந்த மொழியில் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிப்பாணையில் தெரிவிக்கவில்லை. இந்நிலையில், தேர்வுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு அனுப்பப்பட்ட நுழைவுச் சீட்டில் ஆங்கிலத்தில் தேர்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்ததாக மனுதாரர் தரப்பு வக்கீல் வாதிட்டார்.இதையடுத்து, கணினி ஆசிரியருக்கான தேர்வை ஏன் தமிழில் நடத்தவில்லை என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, இதுதொடர்பாக செப்டம்பர் 6ம் தேதி விளக்கம் அளிக்குமாறு ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு உத்தரவிட்டார்
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U