👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அனைத்துப் பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் பேராசிரியர் காலிப் பணியிட விவரங்களை, வரும் 20-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) மீண்டும் அறிவுறுத்தியுள்ளது.
நாடு முழுவதும் தரமான உயர்கல்வி வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக பல்வேறு நடவடிக்கைகளை யுஜிசி எடுத்து வருகிறது. அதற்காக, பேராசிரியர் பணியிடத்துக்கான குறைந்தபட்ச கல்வித் தகுதியை யுஜிசி அண்மையில் மாற்றியமைத்தது.
அதன்படி முதுநிலை பட்டப் படிப்புடன் தேசிய அளவிலான தகுதித் தேர்வு (நெட்) அல்லது மாநில அளவிலான தகுதித் தேர்வில் (செட்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது ஆராய்ச்சிப் படிப்பை (பிஎச்.டி.) முடித்திருப்பதை கட்டாயமாக்கியது.
அடுத்ததாக, பேராசிரியர் பணியிடங்களை முழுமையாக நிரப்பவும், அவ்வாறு பணியிடங்களை நிரப்பும் பணியைத் தொடங்கிய 6 மாத காலத்துக்குள்ளாக முடிக்க வேண்டும் எனவும் யுஜிசி அறிவுறுத்தியது. அதன் தொடர்ச்சியாக, பேராசிரியர் காலிப் பணியிட விவரங்களை சமர்ப்பிக்குமாறு யுஜிசி இப்போது அறிவுறுத்தியிருக்கிறது.
இதுதொடர்பாக நாடு முழுவதும் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகத் துணைவேந்தர்களுக்கும் யுஜிசி கடந்த ஜூலையில் சுற்றறிக்கை அனுப்பியது. அப்போது ஆகஸ்ட் 10-ஆம் தேதிக்குள் இந்த விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.
ஆனால், பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் விவரங்களைச் சமர்ப்பிக்காததைத் தொடர்ந்து இப்போது மீண்டும் வியாழக்கிழமையன்று அதே சுற்றறிக்கையை யுஜிசி வெளியிட்டுள்ளது.
அதில், அனைத்துப் பல்கலைக்கழகங்கள், இணைப்புக் கல்லூரிகளில் காலியாக உள்ள பேராசிரியர் பணியிட விவரங்களை, வரும் 20-ஆம் தேதிக்குள் முழுமையாக சமர்ப்பிக்க வேண்டும்.
பேராசிரியர்கள் தேர்வு செய்யப்படும் நடைமுறை, இடஒதுக்கீடு விவரங்கள் ஆகிய விவரங்களுடன் சேர்த்து பதிவேற்றம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U