சென்னை ஐஐடி-க்கு மேம்பட்ட கல்வி நிறுவன அந்தஸ்து: ரூ. 1,000 கோடி நிதியுதவி கிடைக்கிறது - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, September 06, 2019

சென்னை ஐஐடி-க்கு மேம்பட்ட கல்வி நிறுவன அந்தஸ்து: ரூ. 1,000 கோடி நிதியுதவி கிடைக்கிறது

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சென்னை ஐ.ஐ.டி.க்கு தலைசிறந்த நிறுவனம் என்ற அங்கீகாரம் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அளித்துள்ளது. பனாரஸ் பல்கலையில் காரக்பூர் ஐ.ஐ.டி., டெல்லி பல்கலை, ஐதராபாத் பல்கலைக்கும் சிறப்பு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் மேம்பட்ட கல்வி நிறுவனத் திட்டத்தின் கீழ் சென்னை ஐஐடி உள்பட மேலும் 5 அரசு உயர்கல்வி நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதன்படி, இந்த 5 கல்வி நிறுவனங்களுக்கும் வளர்ச்சி நிதியாக ரூ. 1,000 கோடியை மத்திய அரசு வழங்க உள்ளது. உலகத் தரத்துக்கு இந்திய பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்களை உயர்த்தும் நோக்கத்தோடு மேம்பட்ட கல்வி நிறுவன (ஐய்ள்ற்ண்ற்ன்ற்ங் ர்ச் உம்ண்ய்ங்ய்ஸ்ரீங்) திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இந்தத் திட்டத்தின் கீழ் 10 அரசு உயர்கல்வி நிறுவனங்கள், 10 தனியார் உயர்கல்வி நிறுவனங்கள் என நாடு முழுவதிலுமிருந்து 20 கல்வி நிறுவனங்கள் தேர்வு செய்யப்படும். அவ்வாறு தேர்வு செய்யப்படும் அரசு உயர்கல்வி நிறுவனங்களுக்கு ரூ. 1,000 கோடி நிதியுதவி அளிக்கப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு நிதியதவி அளிக்கப்படாது என்ற போதும், பிற சுதந்திரங்கள் அனைத்தும் வழங்கப்படும். அதாவது, கல்வி மற்றும் நிர்வாகத்தில் முழு தன்னாட்சி அதிகாரம், நிதி பயன்பாடு சுதந்திரம் அதாவது, கல்வி நிறுவன வளர்ச்சிக்காக நிதி பெறுதல், செலவழித்தலில் முழு தன்னாட்சி அதிகாரம், மத்திய அரசின் அனுமதி பெறாமலே தலைசிறந்த வெளிநாட்டு உயர்கல்வி நிறுவனங்களுடன் கூட்டுறவு வைத்துக்கொள்ளும் அனுமதி, தொழில் நிறுவனத்தில் பணிபுரிபவர்களை கௌரவ விரிவுரையாளர்களாக நியமித்துக்கொள்ளும் அதிகாரம், 25 சதவீத இடங்களில் வெளிநாட்டு பேராசிரியர்களை பணியமர்த்திக் கொள்ளும் அதிகாரம், வெளிநாட்டு கல்வி நிறுவனங்களுடன் மாணவர், ஆசிரியர் பரிமாற்றம் செய்யும் அதிகாரம் என பல்வேறு சுதந்திரங்கள் வழங்கப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக பெங்களூரில் இந்திய அறிவியல் கழகம், தில்லி ஐஐடி, மும்பை ஐஐடி ஆகிய மூன்று அரசு கல்வி நிறுவனங்களும், மணிபால் உயர்கல்வி நிறுவனம், பிலானியில் உள்ள பிர்லா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் நிறுவனம், ஜியோ கல்வி நிறுவனம் ஆகிய 3 தனியார் கல்வி நிறுவனங்களும் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டன.
இப்போது இரண்டாம் கட்டமாக சென்னை ஐஐடி, வாராணசியில் உள்ள பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகம், காரக்பூர் ஐஐடி, தில்லி பல்கலைக்கழகம், ஹைதராபாத் பல்கலைக்கழகம் ஆகிய 5 அரசு பல்கலைக்கழகங்கள் தேர்வு செய்யப்பட்டு அதிகராப்பூர்வமாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வியாழக்கிழமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விஐடி, அமிர்தா விஷ்வ வித்ய பீடம் கல்வி நிறுவனங்களுக்கும்: இதில் தமிழகத்தில் உள்ள வேலூர் விஐடி, அமிர்தா விஷ்வ வித்ய பீடம், புதுதில்லி ஜாமியா ஹதார்த் கல்வி நிறுவனம், ஒடிஸாவில் உள்ள கலிங்கா தொழில்நுட்ப கல்வி நிறுவனம், மொஹாலியில் உள்ள சத்திய பாரதி அறக்கட்டளையின் பாரதி கல்வி நிறுவனம் ஆகியவற்றுக்கு மேம்பட்ட கல்வி நிறுவன அந்தஸ்துக்கான உத்தேச ஒப்புதல் கடிதம் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த 5 கல்வி நிறுவனங்களும் அவர்கள் மேம்பட்ட கல்வி நிறுவனமாக இயங்குவதற்கு தயார் நிலையில் இருப்பதற்கான ஒப்புதல் கடிதத்தை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கவேண்டும். அதை ஏற்றுக்கொண்டு, மத்திய அரசு அனுமதி அளித்ததும், இந்த 5 கல்வி நிறுவனங்களும் மேம்பட்ட கல்வி நிறுவனங்களாக அந்தஸ்த்து பெற்றுவிடும்.
அண்ணா பல்கலைக் கழகம்: மேலும், இந்தத் திட்டத்தின் கீழ் மாநில அரசு பல்கலைக்கழகங்களான சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் மேற்கு வங்கத்தின் ஜாதவ்பூர் பல்கலைக்கழகம் ஆகியவை தேர்வு செய்யப்பட்டுள்ளபோதும், இந்தத் திட்ட நிதியில் மாநில அரசு பங்களிப்பை உறுதி செய்து உத்தரவாதம் அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதுபோல, இந்தத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டிருக்கும் உத்தரப் பிரதேச ஷிவ் நாடார் பல்கலைக்கழகம், ஹரியாணா ஓ.பி.ஜிண்டால் பல்கலைக்கழகம் ஆகிய கல்வி நிறுவனங்களையும் மேம்பட்ட நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாக அறிவிக்க வசதியாக, அவற்றின் தற்போதைய தனியார் பல்கலைக்கழகம் அந்தஸ்த்தை சட்டப்பேரவையில் சட்டம் இயற்றி நீக்கம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews