உதவி பேராசிரியர் பணியிடம் நிரப்புவதை எதிர்த்து வழக்கு: அரசுக்கு ஐகோர்ட் கிளை நோட்டீஸ் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, September 06, 2019

உதவி பேராசிரியர் பணியிடம் நிரப்புவதை எதிர்த்து வழக்கு: அரசுக்கு ஐகோர்ட் கிளை நோட்டீஸ்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மீன்வள பல்கலை.யில் உதவி பேராசிரியர் பணியிடம் நிரப்புவதை எதிர்த்த வழக்கில், அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடியைச் சேர்ந்த ஜென்சி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: நான் மீன்வளத்துறையில் இளங்கலை பட்டமும், மீன்வள உயிரி தொழில்நுட்பவியல் துறையில் முதுநிலை பட்டம் பெற்றுள்ளேன். இதற்கான தகுதித்தேர்விலும் வெற்றி பெற்றுள்ளேன். நான் மீன்வளத்துறை தொடர்பான கல்லூரிகளில் மட்டுமே பணியாற்ற முடியும். இந்நிலையில் கடந்த ஜூன் 27ல் மீன்வள பல்கலைக்கழகம் மற்றும் அதன் கல்லூரிகளில் காலியாகவுள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியானது. அதில், மீன்வள உயிரி தொழில்நுட்பவியல் துறையில் உதவி பேராசிரியராக பணியாற்ற, இளங்கலை அறிவியல் பட்டத்தை தகுதியாக பெற்றிருக்க வேண்டுமென கூறப்பட்டுள்ளது.
மீன்வள உயிரி தொழில்நுட்பவியல் துறையில் பட்டம் பெற்று பலரும் காத்திருக்கும் நிலையில், இளங்கலை அறிவியல் பிரிவில் பட்டத்தை தகுதியாக நிர்ணயம் செய்தது ஏற்கத்தக்கதல்ல. இதனால் இத்துறையில் பட்டம் பெற்றவர்களும் பயிலும் மாணவர்களும் பாதிப்பர். எனவே, மீன்வளப் பல்கலைக்கழக உதவிப்பேராசிரியர் பணியிடத்தை நிரப்புவதற்கென வெளியான அறிவிப்பை ரத்து செய்யவேண்டும். உதவி பேராசிரியர் பணிக்கு மீன்வள உயிரித்தொழில் நுட்பவியல் துறையில் பட்டத்தை தகுதியாகக் கொண்டு, புதிய அறிவிப்பை வெளியிட உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி வி.எம்.வேலுமணி, மனு குறித்து தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழக பதிவாளர், தூத்துக்குடி மீன்வள ஆராய்ச்சி நிறுவன முதல்வர், தமிழக கால்நடைத்துறை முதன்மைச் செயலர் உள்ளிட்டோருக்கு, நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை செப்.23க்கு தள்ளிவைத்தார்
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews