அடுத்த கல்வியாண்டு முதல் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பூட்ஸ் மற்றும் காலுறை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, September 22, 2019

Comments:0

அடுத்த கல்வியாண்டு முதல் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பூட்ஸ் மற்றும் காலுறை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழகத்தில் அடுத்த கல்வியாண்டு முதல் அனைத்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் பூட்ஸ் மற்றும் காலுறைகள் வழங்கப்படும் என, பள்ளிக் கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மதுரை விரகனூரில் சனிக்கிழமை நடைபெற்ற மெட்ரிக். பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார ஆணை வழங்கும் விழாவுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியது: தமிழகத்தில் மொத்தம் 2,038 மெட்ரிக். பள்ளிகளுக்கு ஆண்டுதோறும் அங்கீகாரம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்குப் பதிலாக 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தொடர் அங்கீகாரம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த கல்வியாண்டு முதல் அனைத்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் பூட்ஸ் மற்றும் காலுறைகள் வழங்கப்படும். மேலும், 8, 9 மற்றும் 10-ஆம் வகுப்புகள் படிக்கும் 20 லட்சம் மாணவர்களுக்கு கையடக்கக் கணினிகள் (டேப்லெட்) வழங்கப்படும். அனைத்து அரசுப் பள்ளி வகுப்பறைகளில் இணையதள இணைப்புடன் கூடிய கணினி வசதி ஏற்படுத்தப்படும். அரசுப் பள்ளிகளில் 7 ஆயிரம் ஸ்மார்ட் வகுப்பறைகளும், 60 ஆயிரம் வகுப்பறைகளில் ஸ்மார்ட் போர்டுகளும் அமைத்து கொடுக்கப்படும்.
மேலும், 7,500 அரசுப் பள்ளிகளில் காணொலிக் காட்சி மூலம் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க ஏற்பாடு செய்யப்படும். பள்ளிக் கல்வித் துறை மூலம் கல்விக்கென தனியாக தொலைக்காட்சி துவங்கப்பட்டுள்ள நிலையில், இரண்டாவதாக ஒரு தொலைக்காட்சி தொடங்கப்பட உள்ளது. மத்திய அரசின் அறிவிப்பை ஏற்று, அனைத்து மாநிலங்களிலும் 5 மற்றும் 8-ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்துவதற்கு தயாராக உள்ளனர். ஆனால், தமிழகத்தில் மாணவர்களுக்கு மனஅழுத்தம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக, அவர்களுக்கு 3 ஆண்டுகள் திறன் வளர்ப்புப் பயிற்சி அளிக்கப்படும். அதுவரை 5, 8-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றார். மதுரை மற்றும் தேனி, சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் செயல்படும் மெட்ரிக்குலேசன் பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார ஆணை வழங்கும் விழா விரகனூர் ரிங் ரோட்டில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் இன்று நடந்தது. இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டு மெட்ரிக் பள்ளிகளுக்கு அங்கீகார ஆணையை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- இந்திய நாடே திரும்பி பார்க்கும் சாதனைகளை தமிழகத்தில் செய்தவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. அவரது வழியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் தற்போது பல சாதனைகளை செய்து வருகிறார்.விவசாய குடும்பத்தில் பிறந்த காரணத்தினால் தான் குடிமராமத்து பணிகளை முதல்வர் செயல்படுத்தி உள்ளார்.நீரை சிக்கனமாக சேமிக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் தற்போது குடிமராமத்து பணிகளை செய்து வருகிறோம்.
20 லட்சம் மாணவர்களுக்கு டேப் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 7 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறையும், 60 ஆயிரம் பள்ளிகளில் கணினியும், இன்டர்நெட் வசதியும் ஏற்படுத்தப்படும்.துறைக்கு துறை போட்டி போட்டிக் கொண்டு பல நலத்திட்டப் பணிகள் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தொழில் தொடங்க ஏதுவான, சாதகமான மாநிலமாக இந்தியாவில் தமிழகம் 2-வது இடத்தை பிடித்துள்ளது. இதற்கு முதல்வரின் நடவடிக்கைதான் காரணம். ரூ. 3 லட்சத்து, 431 கோடி வெளிநாட்டு முதலீடுகளை பெற்றுள்ளோம். ஜெயலலிதாவிற்கு பிறகு அரசு எவ்வாறு செயல்படும் என கேள்வி கேட்டார்கள். கேள்வி கேட்டவர்களுக்கு பதிலாக அ.தி.மு.க. அரசு தற்போது சிறப்பாக செயல்பட்டு வருகிறது.மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் ஆண்டுக்கு ஒருமுறை ஆய்வு நடத்தப்படும். மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் கட்டப்பட்ட கட்டிடங்களில் ஆய்வு செய்ய தமிழக முதல்வரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். அதன் அடிப்படையிலும் அங்கீகார ஆணை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 70 லட்சம் மாணவர்களின் கல்வியை செழுமைப்படுத்துவதற்கே அங்கீகார ஆணை வழங்கப்படுகிறது.தனியார் பள்ளிகளிடம் அரசு பாரபட்சம் காட்டவில்லை. அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு அடுத்த கல்வி ஆண்டு ஷூ, சாக்ஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews