இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை குறைந்ததற்கு அண்ணா பல்கலை. மட்டுமே காரணமல்ல: துணை வேந்தர் சூரப்பா பேட்டி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, August 29, 2019

இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை குறைந்ததற்கு அண்ணா பல்கலை. மட்டுமே காரணமல்ல: துணை வேந்தர் சூரப்பா பேட்டி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
அண்ணா பல்கலைக்கழக நூலகத்துறை, அறிவியல் பதிப்பகங்கள் இணைந்து நடத்திய புத்தக காட்சியை அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா நேற்று தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர் கூறியதாவது: பள்ளி மாணவர்கள் தங்கள் தாய்மொழியிலேயே கல்வி கற்க வேண்டும். அறிவியல், விஞ்ஞானம் ஆகியவற்றை தாய்மொழியில் கற்கும்போது மாணவர்கள் அதை எளிதில் புரிந்துகொள்ள முடியும். ஜெர்மனி, ஜப்பான் போன்ற நாடுகளில் முழுக்க முழுக்க அனைத்தையும் பள்ளிகளில் தாய்மொழியிலேயே கற்கின்றனர். அதனால் அவர்கள் அறிவியலில் வேகமாக முன்னேறி வருகின்றனர். இன்ஜினியரிங் படிக்கும் மாணவர்கள் தங்களின் கல்வியை ஆங்கிலத்தில் கற்கலாம். ஆனால் பள்ளிக்கல்வி தாய்மொழியிலேயே படிப்பது நல்லது. புதிய கல்விக்கொள்கையின் வரைவு அறிக்கையை நான் படித்து பார்க்கவில்லை. ஆனால், எந்த கல்விக்கொள்கையாக இருந்தாலும் அதில் கூறப்பட்டுள்ள விஷயங்கள் அமல்படுத்தப்பட வேண்டும். ஏற்கனவே வெளியிடப்பட்ட கல்விக்கொள்கையில் பல நல்ல விஷயங்கள் கூறப்பட்டிருந்தது. அதில் கூறப்பட்டுள்ள ஒவ்வொரு கருத்தும் விவாதிக்கப்பட வேண்டும், அமல்படுத்தப்பட வேண்டும். தமிழகத்தில் இன்ஜினியரிங் கல்லூரிகளில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. மாணவர் சேர்க்கை எண்ணிக்ைக குறைந்து வருவதற்கு அண்ணா பல்கலைக்கழகம் மட்டுமே காரணமல்ல. இதில் ஏராளமான விஷயங்கள் அடங்கியுள்ளன. மாநில அரசு, ஏஐசிடிஇ, தனியார் கல்லூரிகளின் நிர்வாகங்களும் காரணம்தான். மாணவர் சேர்க்கை எண்ணிக்கை அதிகரிக்க மேற்சொன்ன அனைத்து அமைப்புகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அவ்வாறு செயல்படும் பட்சத்தில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews