அண்ணா பல்கலை.யில் போலி பணி நியமன ஆணையுடன் வந்தவர்களால் பரபரப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, August 29, 2019

அண்ணா பல்கலை.யில் போலி பணி நியமன ஆணையுடன் வந்தவர்களால் பரபரப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
அண்ணா பல்கலைக்கழகத்தில் போலி பணி நியமன ஆணையுடன் வந்து தர்ணாவில் ஈடுபட முயன்றவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த சில ஆண்டுகளில் பல்வேறு விதமான முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விடைத்தாள் மறுமதிப்பீட்டில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்தது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் உள்பட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அதே போல் இதற்கு முன், பதவியிலிருந்தவர்கள் மீதும் ஏராளமான முறைகேடு புகார்கள் உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை 11 மணியளவில் அண்ணா பல்கலைக்கழகத்தில் கிளார்க் பணிக்கான பணி நியமன ஆணை பெற்றுள்ளதாக 12 பேர் அண்ணா பல்கலைக்கழக கூடுதல் பதிவாளர் அலுவலகத்துக்கு வந்தனர். குறிப்பிட்ட அலுவலகத்திலேயே தங்களுக்கு நேர்காணல் நடந்ததாகவும், அப்போதே பணி நியமன ஆணை வழங்கப்பட்டதாக தெரிவித்தனர். பணிக்கான கலந்தாய்வின்போது வழங்கப்பட்ட ஆணைகளை காட்டினர். இதுவரை பணிக்கு அழைக்கவில்லை என்றும் தெரிவித்தனர். அந்த ேபாலி பணி நியமன ஆணைகளில் முன்னாள் பதிவாளர் ஒருவரின் கையொப்பம் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில் அவ்வாறு எந்த பணி நியமன ஆணையும் வழங்கப்படவில்ைல என அதிகாரிகள் தரப்பில் மறுப்பு தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த குறிப்பிட்ட 12 பேரும் அங்கேயே அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்த முயன்றனர். அதிகாரிகள் யாரிடம் பணி நியமன ஆணை பெற்றீர்களோ, அவர்களிடம் அதுதொடர்பாக கேட்டுக்கொள்ளுங்கள் அல்லது இதுதொடர்பாக காவல்துறையில் புகார் கொடுங்கள் என்று சொல்லியுளளனர். ஆனால் தர்ணா போராட்டத்தை தொடர முயன்றதால், காவல்துறையில் புகார் கொடுக்கப் போவதாக சொன்னதால் குறிப்பிட்ட 12 பேர், அந்த வளாகத்திலிருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது. இதனால் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews