👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
அரசுப் பள்ளிகளில் வாசிப்பை ஊக்குவிக்கும் தனியார் கல்லூரி பேராசிரியை: மதுரை கொண்டபெத்தான் நடுநிலைப் பள்ளிக்கு நூல்கொடை
மதுரையைச் சேர்ந்த தனியார் கல்லூரி பேராசிரியை ஒருவர் அரசுப் பள்ளிகளில் வாசிப்பை ஊக்குவிக்கும் வகையில் நூலகத்திற்கு தேவையான புத்தகங்களை வழங்கி வருகிறார்.
இதுவரை மதுரை சுற்றுவட்டாரப் பகுதியில் 22 அரசுப் பள்ளிகளில் இவர் நூல்கொடை செய்திருக்கிறார். அந்த வரிசையில் மதுரை கொண்டபெத்தான் நடுநிலைப் பள்ளியில் இன்று (புதன்கிழமை) அவர் நூல்கொடை செய்தார்.
இப்பள்ளியில் நூலகம் அமைத்தல் விழா தலைமையாசிரியர் தென்னவன் தலைமையில் நடைபெற்றது. ஆசிரியை ராமலட்சுமி முன்னிலை வகித்தார். நூல்கொடை முயற்சியாளர் பேராசிரியை அர்ச்சனா தெய்வா நூலகத்திற்கு தேவையான புத்தகங்களை வழங்க ஆசிரியர் பீட்டர் பெற்றுக் கொண்டார்.
இது தொடர்பாக மாணவர் சந்தோஷ், தாங்கள் மகிழ்ச்சியாக இருந்தாதகவும் தன்னம்பிக்கை அதிகரித்ததாகவும் கூறினார்கள்.
மதுரை அனுப்பானடியைச் சேர்ந்தவர் அர்ச்சனா தெய்வா (38). இவர் மதுரையில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் பேராசிரியையாக உள்ளார். இவர் அரசுப் பள்ளி மாணவர்களிடையே வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தும் வகையில் குழந்தை எழுத்தாளர்களின் புத்தகங்களை கொடையாக வழங்கி வருகிறார். இதுவரை 22 அரசுப் பள்ளிகளுக்கு நூல்களை கொடையாக வழங்கி வருகிறார். மேலும், மே மாதம் வாசிப்பு பட்டறைகள் நடத்தியும், மாணவர்களிடையே வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தி வருகிறார்.
இன்றைய நிகழ்ச்சி தொடர்பாக கொண்டபெத்தான் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மு.தென்னவன் கூறும்போது, "எங்கள் பள்ளியில் நூலகம் அமைக்க ரூ.3000 மதிப்புள்ள புத்தகங்களை பேராசிரியை அர்ச்சனா தெய்வா கொடையாக வழங்கியுள்ளார். பாரதி புத்தகாலயா பதிப்பக புத்தகங்களை வழங்கியிருக்கிறார். மாணவர்களின் விருப்பத்தை அறிந்து அதற்கேற்ப புத்தகங்களை தேர்வு செய்து வழங்கியிருக்கிறார். கொ.மா.கோ.இளங்கோ, விழியன் போன்ற சிறார் இலக்கிய படைப்பாளிகளின் நூல்கள் இருக்கின்றன. புத்தகங்களைப் பிள்ளைகள் ஆர்வத்துடன் வாங்கிப் பார்த்தனர். அவர்களின் ஆவலைப் பார்க்கும்போது நிச்சயம் அவர்கள் இந்த புத்தகங்கள் அனைத்தையும் வாசித்துவிடுவார்கள் என்றே தோன்றுகிறது. நூல்கொடை பெற்றதோடு நின்றுவிடாமல் மாணவர்களிடம் நாங்கள் வாசிப்பை ஊக்குவிக்க உள்ளோம்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U