10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் திருத்தம்: ஜூன் 4-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தல் Correction in 10th Grade Mark Sheets: Instructions to Apply by June 4th
பத்தாம் வகுப்பு மாணவர்களின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழில் திருத்தங்கள் மேற்கொள்ள ஜூன் 4-க்குள் விண்ணப்பிக்குமாறு தேர்வுத் துறை இறுதி வாய்ப்பு வழங்கியுள்ளது.
இதுகுறித்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தேர்வுத்துறை இணை இயக்குநர் கே.பி.மகேஸ்வரி அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்ப தாவது:
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மே 22-ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து விநியோகிக்க அறிவுறுத்தப்பட்டது. அந்த தற்காலிக மதிப்பெண் சான்றிதழில் மாணவர்கள் பெயர், பிறந்த தேதி, புகைப்படம், பயிற்று மொழி போன்றவற்றில் திருத்தங்கள் மேற்கொள்ள இறுதியாக ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது.
இதையடுத்து தலைமை ஆசிரியர்கள் மாணவர்களின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழிலில் ஏதேனும் திருத்தங்கள் இருப்பின் அதை மேற்கொண்டு சான்றொப்பமிட்டு தேர்வுத் துறை மாவட்ட அலுவலகத்தில் ஜூன் 4-ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும்.
அதற்கான ஒரு நகலை மாணவர்களிடமும் வழங்க வேண்டும். மாணவர்களின் நலன் கருதி பிழைகளற்ற மதிப்பெண் சான்றிதழ்கள் அச்சிடுவதற்காக இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.