ஏற்புடையதல்ல: மேலும் பள்ளிகளை இணைப்பதன் மூலம் தொடக்கப் பள்ளி மாணவர்கள், மேல்நிலைப் பள்ளிகளின் அறிவியல் ஆய்வகம், ஸ்மார்ட் கிளாஸ் நூலகம் ஆகியவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறுவதுடன் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் பயிற்சிக்கோ, விடுப்பிலோ சென்றால் அந்த வகுப்புகளை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் கவனிப்பார்கள் என்று அரசாணையில் குறிப்பிட்டுள்ளது ஏற்புடையதாக இருக்காது. தொடக்கப் பள்ளிக் குழந்தைகளின் மனநிலை வேறு, உயர்நிலை மேல்நிலைப் பள்ளி மாணவர்களின் மனநிலை வேறு. இவை இரண்டையும் ஒப்பீடு செய்யக் கூடாது. இதனால் குழந்தைகளின் மன நலம் பாதிக்கும். ஆட்குறைப்பு நடவடிக்கை காரணமாக பள்ளிகளை ஒருங்கிணைக்கிறோம் என்ற பெயரில் தொடக்கக் கல்வித் துறையை நிரந்தரமாக மூடும் முயற்சியைக் கைவிட்டு தொடக்கக் கல்வியை மேம்படுத்தவும் தொடக்கப் பள்ளிகளுக்கு அடிப்படை வசதி உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்றும் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் வேண்டுகின்றேன்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.