பாரதிதாசன் பல்கலையில் கவர்னரின் தனி செயலாளர் ஆலோசனை கூட்டம் திடீர் ரத்து: பேராசிரியர்கள், மாணவர்கள் எதிர்ப்பால் முடிவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, August 30, 2019

பாரதிதாசன் பல்கலையில் கவர்னரின் தனி செயலாளர் ஆலோசனை கூட்டம் திடீர் ரத்து: பேராசிரியர்கள், மாணவர்கள் எதிர்ப்பால் முடிவு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் புதிய கல்விக்கொள்கை குறித்து நேற்று கவர்னரின் தனி செயலாளர் பேராசிரியர்களுடன் ஆலோசனை நடத்தப்போவதாக இருந்தது. இதற்காக பேராசிரியர்கள் அழகான உடை அணிந்து வரவேண்டும் என கூறப்பட்டு இருந்தது. பேராசிரியர்கள், மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், கூட்டத்தை பதிவாளர் ரத்து செய்தார். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நேற்று மாலை 6 மணிக்கு கவர்னரின் தனி செயலாளர் ராஜகோபால், கல்லூரி டீன், இயக்குனர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் துறை தலைவர்களுடன் கலந்துரையாடல், ஆலோசனை கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ராஜகோபால் வருகையையொட்டி, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பதிவாளர் கோபிநாத் பேராசிரியர்களுக்கு நேற்றுமுன்தினம் ஒரு சுற்றறிக்கை அனுப்பி இருந்தார்.
அதில், கவர்னரின் தனி செயலாளர் ராஜகோபால் இன்று (நேற்று) மாலை 6 மணிக்கு பல்கலைக்கழக பிரதான வளாகத்தில் உள்ள குளுகுளு ஆடிட்டோரியத்தில் டீன், டைரக்டர்கள், துறைத்தலைவர்கள், இயக்குனர்கள், பேராசிரியர்கள் ஆகியோருடன் கலந்துரையாடுகிறார். இதனால், அனைவரும் அழகான ஆடை அணிந்து வரவேண்டும். இதில் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த சுற்றறிக்கை பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் மத்தியில் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. இந்நிலையில், திடீரென காலை 10.30 மணிக்கு கவர்னரின் செயலாளர் வருகை ரத்து செய்யப்பட்டதாக பேராசிரியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பல்கலைக்கழகம் சார்பில் எந்த தலைப்பில் கலந்துரையாடுகிறார் என்று தெரிவிக்கப்படவும் இல்லை. ரத்து செய்யப்பட்டதற்கான காரணமும் தெரிவிக்கப்படவில்லை. பல்கலைக்கழக வட்டாரத்தில் விசாரித்தபோது, புதிய கல்விக்கொள்கை குறித்து கலந்துரையாட ஏற்பாடு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. கவர்னரின் தனி செயலாளர் ராஜகோபால், கலந்துரையாடல் குறித்து பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்க (ஏயுடி) பொது செயலாளர் பாலமுருகன் கூறுகையில், ‘‘இதுவரை கவர்னரின் தனி செயலாளர் யாரும், எந்த பல்கலைக்கழகத்திலும் போய் கலந்துரையாடியது இல்லை. ஆனால் இவர் புதிதாக கலந்துரையாட வருவதற்கு பேராசிரியர்கள், அலுவலர்கள் அழகான ஆடை அணிந்து வரவேண்டும் என்று கூறுவது பல்கலைக்கழக மாண்புக்கு உகந்ததல்ல. நாங்கள் என்றும் டீசென்ட் உடையுடன்தான் வருகிறோம். அழகான உடையுடன் வரவேண்டும் என சுற்றறிக்கை அனுப்பியது பேராசிரியர்களை கேவலப்படுத்துவதாகும். எங்களுடன் கலந்துரையாடுவதற்கு கவர்னரின் செயலாளருக்கு எந்த அதிகாரமும் இல்லை’’ என்றனர்
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews